அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒரு பிரிவினரால் கொல்லப்படுகின்றன... பா.ஜ.க.வை மறைமுகமாக தாக்கிய மம்தா பானர்ஜி

 
துர்கா பூஜை கிடையாது என அரசு சொன்னதாக நிரூபித்தால் 101 தோப்புக்கரணம் போடுகிறேன்.. மம்தா பானர்ஜி சவால்

அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒரு பிரிவினரால் கொல்லப்படுகின்றன என்று பா.ஜ.க.வை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கினார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற மேற்கு வங்க நீதி அறிவியல் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித்தை நான் வாழ்த்த வேண்டும். அவருக்கு சில மாதங்கள் மட்டுமே (பதவி) கிடைத்தது. எனக்கு தெரிந்து  அடுத்த மாதம் அவர் ஓய்வு பெறுகிறார். ஆனால் இந்த இரண்டு மாதங்களில் உண்மையான நீதித்துறை என்று அழைக்கப்படுவதை நாம் பார்த்தோம். மேலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்தார். 

யு.யு.லலித்

தற்போதைய இந்திய தலைமை நீதிபதியை (யு.யு. லலித்) வாழ்த்துவதற்கு இது சரியான மேடையா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் நாட்டின் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கை மிகவும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்று நான் சொல்ல வேண்டும். நீதிமன்றம் ஒரு மத ஸ்தலத்தைப் போன்றது. நீதிக்காக மக்கள் சட்ட கதவுகளை தட்டுகிறார்கள். எனவே நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை வைப்பது முக்கியம். மக்கள் நீதித்துறை மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்று நான் கூறவில்லை, ஆனால் நாட்டில் நடப்பது அதை விட மோசமானது. 

பா.ஜ.க.

ஊடகங்களால் நீதித்துறையை ஆணையிட முடியாது. நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை அழிக்கக்கூடாது. இன்றைய நாட்களில் தேவையற்ற துன்புறுத்தல்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒரு பிரிவினரால் கொல்லப்படுகின்றன. இது தொடர்ந்தால் அது குடியரசு தலைவர் ஆட்சி வடிவத்தை நோக்கி நகரக்கூடும். அப்போது ஜனநாயகம் எங்கு நிலவும்?. எனவே ஜனநாயகத்தை பாதுகாக்கவும், அதுவே எனது ஒரே வேண்டுகோள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.