எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க பா.ஜ.க. மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துகிறது.. மம்தா பானர்ஜி

 
மம்தா பானர்ஜி

எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க பா.ஜ.க. மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு நோ என்ட்ரி என்பதை நான் தெளிவாக கூறுகிறேன். 

பா.ஜ.க.

அது (பா.ஜ.க.) போக வேண்டும். பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க பா.ஜ.க. மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துகிறது. மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான அரசு கலப்படம் செய்யப்பட்டது. பா.ஜ.க. அரசு பணமதிப்பிழப்பு போன்ற பேரழிவு முடிவுகளால் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துள்ளது. இது ஒரு பெரிய மோசடி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமித் ஷா

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மத்திய உள்துளை அமைச்சர் அமித் ஷா அண்மையில் மேற்கு வங்கம் சென்றிருந்தபோது, கொரோனா வைரஸ் முடிந்த பிறகு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவோம் என உறுதியளித்தார். இதனையடுத்து, நெருப்புடன் விளையாடாதீர்கள் என மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்தார்.