எரிபொருள் விலையை உயர்த்தி சாமானியர்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள்.. காங்கிரஸ்

 
பெட்ரோல், டீசல்

எரிபொருட்களின் விலையை உயர்த்தி சாமானியர்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள் என பா.ஜ.க அரசை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்தார்.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 137 நாட்களுக்கு பிறகு கடந்த செவ்வாய்க்கிழமையன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 80 காசுகள் உயர்த்தின. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் தொடர்ந்து 2வது நாளாக கடந்த புதன்கிழமையன்றும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 80 காசுகள் உயர்த்தின. இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் தொடர்பாக பா.ஜ.க.வை சிவ சேனா விமர்சனம் செய்துள்ளது.

சஞ்சய் ரவுத்

சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரவுத் செய்தியாளர்களிடம் பேசுகையில், உண்மையான பிரச்சினை ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரோ அல்லது தி காஷ்மீர் பைல்ஸ் படமோ அல்லது ஹிஜாப்போ அல்ல, பணவீக்கம் மற்றும் வேலையின்மைதான் உண்மையான பிரச்சினை. எரிபொருட்கள் விலைகள் அதிகரித்து வருகின்றன. தற்போது தேர்தல் முடிந்து, பணவீக்கம் திரும்பியுள்ளது. இது பா.ஜ.க.வின் விளையாட்டு என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன் கார்கே கூறுகையில், அவர்கள் (மத்திய அரசு) விலையை 80 காசுகள் உயர்த்துகிறார்கள், சில சமயங்களில் ரூ.1 உயர்த்துகிறார்கள். அவர்கள் விலையை அதிகரிக்க விரும்பினால், அதை ஒரே நேரத்தில் அதிகரிக்கவும். அது ரூ.10, ரூ.15 அல்லது ரூ.20ஆக இருக்கட்டும். இப்படி விலைவாசியை உயர்த்தி மக்களை சிரமப்படுத்துகிறார்கள்.சாமானியர்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள்