எல்லையில் சீனா கட்டுமான பணிகளை மேற்கொள்வதை பற்றி மோடி அரசு கவலைப்படவில்லை.. காங்கிரஸ்

 
காங்கிரஸ்

எல்லையில் சீனா கட்டுமான பணிகளை மேற்கொள்வதை பற்றி பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கவலைப்படவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

சீனா 1960களில் இருந்து தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதியில் பாங்காங் ஏரியில் இரண்டாவது பாலத்தை கட்டுவதாக செய்தி வெளியானது. உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து 20 கி.மீட்டர் தொலைவில் இந்த புதிய பாலம் கட்டப்பட்டு வருவதாக தகவல். இது தொடர்பாக நமது வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், சீனாவால் கட்டப்பட்ட இரண்டு பாலங்களும் கடந்த சில தசாப்தற்காக மற்ற நாட்டின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளில் உள்ளன தெரிவித்தது.

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

இந்நிலையில், உண்மையான கட்டுபாட்டுக் கோடு அருகே சீனா கட்டுமான பணிகளை மேற்கொள்வதை பற்றி பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கவலைப்படவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியது. நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மல்லிகார்ஜூன் கார்கே இது தொடர்பாக கூறியதாவது: சீனா எல்லையில் கிராமங்களையும், சாலைகளையும் அமைத்து வருகிறது.

பிரதமர் மோடி

இதை (எல்லையில் சீனா கட்டுமானம்)  மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவர்கள் (மத்திய பா.ஜ.க. அரசு) அதை கூட பொருட்படுத்தாமல், மக்களையும், இளைஞர்களையும் தவறாக வழி நடத்தி பொய்களை கூறினர். அவர்கள் தவறு செய்ததை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி வெளிப்படையாக பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.