ராகுல் காந்தியின் நடைப்பயண நிறைவு விழாவில் பங்கேற்க 21 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு.. மல்லிகார்ஜூன் கார்கே கடிதம்

 
மல்லிகார்ஜூன் கார்கே

இம்மாதம் 30ம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறவுள்ள ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயண நிறைவு விழாவில் கலந்து கொள்ள வருமாறு 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுககு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

ராகுல் காந்தி தற்போது மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு காஷ்மீரில் இந்த மாத இறுதியில் நிறைவடைய உள்ளது. ஸ்ரீநகரில் இம்மாதம் 30ம்  தேதியன்று இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு விழாவை காங்கிரஸ் நடத்த உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கடிதம் எழுதியுள்ளார். மல்லிகார்ஜூன் கார்கே எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் தொடக்கத்திலிருந்தே, ஒத்த எண்ணம் கொண்ட ஒவ்வொரு இந்தியரையும் பங்கேற்க அழைத்துள்ளோம். 

நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில், பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களும் பல்வேறு கட்டங்களாக நடைப்பயணத்தில் பங்கேற்றனர்.ஜனவரி 30ம் தேதி மதியம் ஸ்ரீநகரில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்க உங்களை அழைக்கிறேன். வெறுப்பு மற்றும் வன்முறையின் சித்தாந்தத்திற்கு எதிரான அயராத போராட்டங்களில் இந்த நாளில் (ஜனவரி 30) தனது உயிரை இழந்த மகாத்மா காந்தியின் நினைவாக இந்த விழா அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் குரல் நாடாளுமன்றத்திலும், ஊடகங்களிலும்  நசுக்கப்படும் இந்த நேரத்தில், நடைப்பயணம் நேரடியாக லட்சக்கணக்கான மக்களை இணைக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியவே ஒரு கோவிலுக்குள்ள விட முடியாதுன்னு சொல்லியிருக்காய்ங்க..! எந்தக் கோவில் தெரியுமா?

ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ம் தேதியன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கினார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தமிழ்நாடு,  கேரளா, கர்நாடகா, தெலங்கானா,மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை தற்போது  பஞ்சாபில் நடைபெற்று வருகிறது. இதன் பிறகு ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியின் இந்திய நடைப்பயணம் நிறைவடைய உள்ளது.