2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம்ன்னு சொன்னீங்க.. எத்தனை பேருக்கு கொடுத்தீங்க?. பா.ஜ.க. அரசை தாக்கிய கார்கே

 
தமிழக அரசின் நடவடிக்கைகளால் வேலை வாய்ப்பின்மை விகிதம் குறைந்தது!

2014ல் ஆண்டுக்கு 2 கோடி வேலை கொடுப்போம்னும் சொன்னீங்க, உண்மையில் எத்தனை பேருக்கு கொடுத்தீங்க என்று மத்திய பா.ஜ.க. அரசை மல்லிகார்ஜூன் கார்கே தாக்கினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே மாநிலங்களவையில் பேசுகையில் கூறியதாவது: நாட்டில் வேலையின்மை பரவலாக உள்ளது. பெரிய தொழிற்சாலைகள் மூடப்படுவதாலும், முதலீடு வராததாலும், அரசு வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதாலும் இளைஞர்கள் துயரத்தில் உள்ளனர். 

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

2014ல் நீங்கள் (பா.ஜ.க.) ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உறுதியளித்தீர்கள். நீங்கள் இதுவரை 15 கோடி வேலைவாய்ப்புகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் உண்மையில் நீங்கள் எத்தனை வேலைகளை வழங்கினீர்கள்?. இந்த ஆண்டு பட்ஜெட் அடுத்த ஐந்தாண்டுகளில் 60 லட்சம் வேலை வாய்ப்புகளை மட்டுமே வழங்குகிறது. மத்திய அரசில் 9 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

பா.ஜ.க.

ரயில்வேயில் 15 சதவீதமும், பாதுகாப்பு துறையில் 40 சதவீதமும், உள்துறையில் 12 சதவீத பணியிடங்களும் காலியாக உள்ளன. இன்று நகர்புறங்களில் வேலையின்மை விகிதம் 9 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 7.2 சதவீதமாகவும் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.