மன்னிப்பு கேட்க வலியுறுத்திய பா.ஜ.க. எம்.பி.க்கள்.. கேலி செய்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே

 
மல்லிகார்ஜுன கார்கே

ராஜஸ்தானில் பேசிய கருத்துக்கு தன்னை மன்னிப்பு கேட்க வலியுறுத்திய பா.ஜ.க. எம்.பி.க்களை, சுதந்திர போராட்டத்தின் போது மன்னிப்பு கேட்டவர்கள், சுதந்திரத்திற்காக போராடியவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மல்லிகார்ஜூன் கார்கே கேலி செய்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வாரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசுகையில், எங்கள் கட்சி தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் உயிரை  கொடுத்தார்கள். நீங்கள் (பா.ஜ.க.) என்ன செய்தீர்கள்?. உங்கள் நாய்கள் எதுவும் நாட்டுக்காக இறந்ததா? குடும்ப உறுப்பினர்கள் யாராவது தியாகம் செய்திருக்கிறார்களா? இல்லை என்று பேசியிருந்தார். இதற்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று காலையில் அவை தொடங்கியதுமே, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் பா.ஜ.க. எம்.பி.க்கள் வலியுறுத்தினர். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், கார்கேவின் கருத்துக்கள், அவரின் புண்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்திய விதம் மற்றும் பொய்யை பரப்பிய முயன்ற விதம் ஆகியவற்றை நாங்கள் கண்டிக்கிறோம். ஆழ்வாரில் புண்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மோடியின் 6 ஆண்டு ஆட்சி காலத்தில் 18,065 கி.மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை மின்மயமாக்கல்.. பியூஸ் கோயல்

இதனையடுத்து மல்லிகார்ஜூன் கார்கே பேசுகையில், நான் இங்கே மீண்டும் சொன்னால், இந்த மக்களுக்கு (பா.ஜ.க.) மிகவும் கடினமாக இருக்கும். ஏனென்றால் சுதந்திர போராட்டத்தின் போது மன்னிப்பு கேட்டவர்கள், சுதந்திரத்திற்காக போராடியவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் இந்தியாவை பிரிக்க யாத்திரை நடத்துகிறது என்றார்கள். அப்போதுதான் நான் சொன்னேன், காங்கிரஸ் எப்போதும் இந்தியாவை ஒன்றிணைக்கும் வேலை செய்கிறது. இதற்காக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தங்கள் உயிரை கொடுத்தனர். நீங்கள் என்ன செய்தீர்கள்? நாட்டிற்காக யார் தியாகம் செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியும் என தெரிவித்தார்.

காங்கிரஸ்

இதனையடுத்து மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிலடி கொடுத்தார். பியூஷ் கோயல் பேசுகையில், உங்கள் வரலாறு அவர்களுக்கு (காங்கிரஸ்) நினைவில் இல்லை என்று நான் நினைக்கிறேன். காங்கிரஸால், பாகிஸ்தானின் அச்சுறுத்தல், சீனாவின் ஆக்கிரமிப்பு, பி.ஆர்.அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல் போன்றவர்களை அவமதித்தல், ஜம்மு காஷ்மீர் ஏற்பட்ட நிலை அவர்களுக்கு நினைவில் இல்லை என தெரிவித்தார்.