குஜராத் தேர்தலில் காங்கிரஸின் வாக்குகளை பிரிக்க யாரோ ஒருவரின் உத்தரவின் பேரில் ஆம் ஆத்மி செயல்படுகிறது.. கார்கே

 
எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸின் வாக்குகளை பிரிப்பதற்காக யாரோ ஒருவரின் உத்தரவின் பேரில் ஆம் ஆத்மி செயல்படுகிறது என்று காங்கிரஸின் மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் கூறியதாவது: நான் செயல்திறன் அரசியலில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். ஆனால் பா.ஜ.க.வின் அரசியல் பாணி பெரும்பாலும் ஜனநாயக உணர்வை கொண்டிருக்கவில்லை ஏனென்றால் எல்லா இடங்களிலும்  இருக்கும் ஒருவரை பற்றி மட்டுமே அவர்கள் அதை உருவாக்குகிறார்கள். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸின் வாக்குகளை பிரிப்பதற்காக யாரோ ஒருவரின் உத்தரவின் பேரில் ஆம் ஆத்மி செயல்படுகிறது. 

ஆம் ஆத்மி

பா.ஜ.க.வினர் தேர்தல் ஆதாயங்களுக்காக அதை (மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு விமர்சனம்) தவறாக பயன்படுத்துகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை, அரசியல்  என்பது தனிநபர்களை பற்றியது அல்ல. இது கொள்கைகளை பற்றியது, இது அவர்களின் (பா.ஜ.க.) செயல்திறன் மற்றும்  அது அரசியலின் வகையை பற்றியது. அது அவர்கள் செய்யும் அரசியல் வகையை பற்றியது. எல்லா இடங்களிலும் இருக்கும் ஒருவரை பற்றி மட்டுமே அவர்கள் அதை உருவாக்குகிறார்கள். 

பா.ஜ.க.

பா.ஜ.க. மற்றும் பிரதமரின் அரசியல் பாணி பெரும்பாலும் ஜனநாயக உணர்வைக் கொண்டிருக்கவில்லை. தேர்தல்களின் அனைத்து நிலைகளிலும் அவரது  பிரச்சாரத்தின் பாணியை பற்றி நான் பல நிகழ்வுகளாக கொடுத்தேன். ஆனால் அவர்கள் எனது கருத்தை தேர்தல் ஆதாயங்களுக்காக தவறாக பயன்படுத்துகிறார்கள். நாடாளுமன்ற அரசியலில் எனக்கு 51 ஆண்டு கால அனுபவம் உள்ளதால், நான் எந்த ஒரு தனிநபர் குறித்தும் கருத்து தெரிவிக்கவோ அல்லது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடவோ இல்லை. வளர்ச்சி, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், வறுமை போன்ற பிரச்சினைகளில் நான் பா.ஜ.க. அரசை விமர்சித்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.