அதற்கு நீங்கதான் சரியான ஆள்.. ராகுல் காந்தியிடம் கேட்போம், வற்புறுத்துவோம், கோருவோம்.. மல்லிகார்ஜூன் கார்கே

 
எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

காங்கிரஸ் தலைவராக திரும்பும்படி ராகுல் காந்தியிடம் கேட்போம், வற்புறுத்துவோம், கோருவோம் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்தார்.


காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக காந்தி குடும்பத்தை சேராததவராகவும், இளம் தலைவராகவும் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதியினர் விருப்பப்படுகின்றனர். அதேசமயம், காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தை சேர்ந்த ஒருவர்தான் சரியாக இருப்பார் என்றும், ராகுல் காந்தியை எப்படியும் மீண்டும் கட்சி தலைவராக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒரு பிரிவினர் சொல்வி வருகின்றனர். 

காங்கிரஸ்

இந்நிலையில், காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும்படி ராகுல் காந்தியிடம் கேட்போம், வற்புறுத்துவோம் மற்றும் கோரிக்கை விடுப்போம் என்று மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மல்லிகார்ஜூன் கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியை வழிநடத்த (தலைவர் பதவி) விரும்பும் எவரும் நாடு முழுவதும் அறியப்பட்டவராக இருக்க வேண்டும். கன்னியாகுமரி முதல் காஷ்மீர்  மற்றும் மேற்கு வங்கம் முதல் குஜராத் வரை ஆதரவை பெற்றவராக இருக்க வேண்டும். அவர் நன்கு அங்கீகரிக்கப்பட்டவராகவும், முழு காங்கிரஸ் கட்சியாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவராகவும்  இருக்க வேண்டும். 

ராகுல் காந்தி

ஆகையால், அங்கு  (கட்சியில் அத்தகைய அந்தஸ்துள்ள) யாரும் இல்லை. நீங்க மாற்றுநபரை சொல்லுங்க, யார் இருக்காங்க? (ராகுல் காந்தியை தவிர கட்சியில் வேறு யார்). காங்கிரஸ் தலைவராக திரும்பும்படி நாங்கள் அவரிடம் கேட்போம், நாங்கள் அவரை வற்புறுத்துவோம் மற்றும் அவரிடம் வேண்டுகோள் விடுப்போம். நாங்கள் அவருக்கு பின்னால் நிற்கிறோம். நாங்கள் அவரை பின்தொடர முயற்சிப்போம். கட்சிக்காகவும், நாட்டின் நலனுக்காகவும், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வை எதிர்த்து போராடுவதற்கும், நாட்டை ஒற்றுமையாக வைத்திருப்பதற்கும் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்குமாறு ராகுல் காந்தி கேட்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.