சசி தரூர் எனக்கு வாழ்த்து சொன்னார், நாங்கள் நண்பர்கள், எதிரிகள் அல்ல... மல்லிகார்ஜூன் கார்கே

 
எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

சசி தரூர் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனக்கு வாழ்த்து தெரிவித்தார், நானும் அவருக்கு சொன்னேன், நாங்கள் நண்பர்கள், எதிரிகள் அல்ல என்று மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடங்குவதற்கு முன்னதாக சசி தரூரும், மல்லிகார்ஜூன் கார்கேவும் போனில் தொடர்புகொண்டு பேசிக் கொண்டனர். மல்லிகார்ஜூன் கார்கேவிடம் சசி தரூர் பேசுகையில், என்ன நடந்தாலும் (தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும்), நாம் நண்பர்களாகவும், சக பணியாளர்களாகவும் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியாளர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன் கார்கே பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: நாங்கள் ஒருவருக்கொருவர் என்ன சொன்னாலும் நட்பு ரீதியாக சொன்னோம், நாங்கள் ஒன்றாக  இணைந்து கட்சியை கட்டியெழுப்பினோம். சசி தரூர் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனக்கு வாழ்த்து தெரிவித்தார். நானும் அவருக்கு அதையே சொன்னேன். 

சசி தரூர்

படிப்படியாக விஷயங்களை செயல்படுத்துவோம். நானும் சசி தரூரும் தொலைப்பேசியில் பேசினோம். நாங்கள் நண்பர்கள், எதிரிகள் அல்ல. அரசியலமைப்புச் சட்டப்படி நாங்கள் ஒன்றுபட்ட அவையில் போராடுகிறோம். எங்களுக்குள் எந்த விரோதமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். எனவே காங்கிரஸின் புதிய தலைவர் யார் என்பது நாளை தெரிந்து விடும்.