நாட்டின் நிலைமை மோசமாக இருப்பதால் நான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்.. மல்லிகார்ஜூன் கார்கே

 
எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

நாட்டின் நிலைமை மோசமாக இருப்பதால் நான் போராட (காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி) விரும்புகிறேன் என்று அந்த தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முக்கிய நபரான மல்லிகார்ஜூன் கார்கே கூறியதாவது: நாட்டின் நிலைமை மோசமாக இருப்பதால் நான் போராட (காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி) விரும்புகிறேன். சி.பி.ஐ. மற்றும அமலாக்கத்துறை போன்ற ஏஜென்சிகள் பலவீனமடைந்து வருகின்றன. அவற்றை எதிர்த்து போராட எனக்கு அதிகாரம் வேண்டும். அதனால்தான் பிரதிநிதிகளின் பரிந்துரையின் பேரில் நான் தேர்தலில் போட்டியிடுகிறேன். பிரதிநிதிகள் போட்டியாளர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவிக்கலாம் ஆனால் அவர்கள் அலுவலக பொறுப்பாளர்கள் அல்ல. 9,300 பிரதிநிதிகள் உள்ளனர் என தெரிவித்தனர் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று, அந்த கட்சியின் மூத்த  தலைவர்கள் சசி தரூர், மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் கே.என்.திரிபாதி ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். இதில் கே.என். திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

சசி தரூர்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மற்றொரு முக்கிய வேட்பாளரான சசி தரூர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: காங்கிரஸ் நாட்டை சிறப்பாக நடத்தி வருகிறது. அனுபவம் வாய்ந்தவர்கள் (கட்சியில்) உள்ளனர். வாக்காளர்களை மீண்டும் வெற்றி பெறச் செய்ய நமது பலத்தை காட்ட வேண்டும். கட்சி கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும். நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அதனால் வாக்காளர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைக்கலாம். எங்கள் கட்சிக்கு மாற்றம் தேவை. நான் தான் மாற்றத்தின் ஊக்கியாக இருப்பேன் என்று நான் உணர்கிறேன்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.