நாட்டில் ஒரு கட்சி மட்டுமே இருக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்.. ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வை குற்றம் சாட்டிய காங்கிரஸ்..

 
பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.

நாட்டில் ஒரே ஒரு கட்சி மட்டுமே இருக்க வேண்டும் என முயற்சிக்கிறார்கள் என ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: அவர்கள் (பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.) ஒரு கட்சி மட்டுமே இருக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள். ஜனநாயகத்தை நம்புவர்கள் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களை வேட்டையாட (தங்கள் கட்சிக்கு இழுக்க) மாட்டார்கள். ஆனால் அவர்கள் (பா.ஜ.க.) வெற்றி பெறாத இடங்களில் மற்ற கட்சி உறுப்பினர்களை வேட்டையாடுகிறார்கள்.

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

மாயாவதியை எங்களுடன் சேரவும், உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியை வழிநடத்தவும் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இதனை ராகுல் காந்தி நேற்று (நேற்று முன்தினம்) வலியுறுத்தினார். பணவீக்கத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர், வேலைகள் இல்லை, ஆர்.எஸ்.எஸ். புலனாய்வு அமைப்புகளை கட்டுப்படுத்துகிறது. இந்த போராட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.

புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் சம பொறுப்பு உள்ளது…. மாயாவதி குற்றச்சாட்டு..

தலித்துக்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி மீது ராகுல் காந்திக்கு அவதூறு இருப்பதாக மாயாவதி குற்றம் சாட்டியிருப்பது சரியல்ல. காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்களுடன் உள்ளது. காங்கிரஸ் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண போராடுகிறது. அவர் (மாயாவதி) சொன்னது சரியல்ல. எதிர்க்கட்சி கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ப்பதற்கான கதவுகள் (வாய்ப்புகள்) திறந்திருக்கிறதா என்பதை இப்போது பேசுவதில் எந்த பயனும் இல்லை. நேரம் வரும் போது பார்ப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.