ஓபிஎஸ் உடன் கைகோர்த்த மாஜி - இபிஎஸ்க்கு சேந்தமங்கலம் தொகுதியில் பின்னடைவு
சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். அவருடன் மேலும் பல முக்கிய பிரமுகர்களும் ஓபிஎஸ் அணையில் இணைந்துள்ளனர் . இதனால் சேந்தமங்கலம் தொகுதியில் எடப்பாடி அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டார். அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் சுயேட்ச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார் . கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டதால் அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இதனால் கடும் அதிருப்தியில் இருந்த சந்திரசேகரன் வேறு எந்த கட்சியிலும் இணையாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று ஓபிஎஸ்ஐ நேரில் சந்தித்து அவரது அணியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். அவருடன் கொல்லிமலை ஊராட்சி குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், கொல்லிமலை அதிமுக ஒன்றிய குழு தலைவர் மாதேஸ்வரி , துணைத் தலைவர் கொங்கம்மாள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தனுஷ்கோடி, லட்சுமி ,பாப்பாத்தி, பாலுசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வராசு ,செல்லமுத்து, நாகலிங்கம் , துணைத் தலைவர் சங்கீதா, கூட்டுறவு சங்க தலைவர்கள் ராஜேந்திரன், சின்னத்துரை மற்றும் 6 கூட்டுறவு சங்க இயக்குனர்கள், மூணு ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர்கள் ஓபிஎஸ் அணையில் இணைந்துள்ளனர் . இதனால் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.