ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ஒரு மணிநேரம் தனியாக பேசினால் பிரச்சனை தீரும்- மைத்ரேயன்

 
மைத்ரேயன்

அதிமுகவிற்கு ஒற்றைத்தலைமை தேவை என தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் ஆலோசனைக்கூட்டத்தில் வலியுறுத்தியதை அடுத்து  கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

It is volunteers opinion: Maitreyan MP | அ.தி.மு.க.வில் மனங்கள் இணையவில்லை  என கூறியது அடிமட்ட தொண்டர்களின் கருத்து: மைத்ரேயன் எம்.பி.

இந்நிலையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் மாஃபா பாண்டியராஜன் மற்றும் மைத்ரேயன் இருவரும் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மைத்ரேயன், “தற்போது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளர் அமைப்பு நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. ஒற்றைத் தலைமை வேண்டுமா..! வேண்டாமா..! என்பது குறித்து அதிமுக பொதுக்குழு கூடிய பிறகு முக்கிய நிர்வாகிகள் கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

ஒற்றைத் தலைமையாக யார் வேண்டும் என்று முதலில் ஆரம்பித்த ஜெயக்குமாரை தான் கேட்க வேண்டும். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து ஒரு மணி நேரம் கலந்து பேசி விவாதித்தால் பல பிரச்சனைகளுக்கு முடிவு வந்துவிடும்” என்று அவர் தெரிவித்தார்.