குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு எதிராக பலாத்கார குற்றச்சாட்டு.. மோடியை மன்னிப்பு கேட்கும்படி கூறுவோம்- மம்தா கட்சி
குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு விவகாரத்தில், மக்களவையில் பேச வாய்ப்பு கொடுத்தால் பிரதமர் மோடியை மன்னிப்பு கேட்கும்படி சொல்ல முடியும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் ஹல்தர்வாஸ் கிராமத்தின் முன்னாள் தலைவர் ஒருவர், குஜராத் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மஹ்மதாவத் அர்ஜூன் சிங் தனது மனைவியை சட்டவிரோதமாக அடைத்து வைத்து பலமுறை பலாத்காரம் செய்தார் என்று குற்றம் சாட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். கடந்த 2015 முதல் 2021ம் ஆண்டு வரை தனது மனைவியை அமைச்சர் பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் தலைவர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் பா.ஜ.க. அமைச்சர் மீதான பலாத்கார குற்றச்சாட்டு விவகாரத்தில், மக்களவை சபாநாயகர் எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு அளித்தால் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க சொல்ல முடியும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா டிவிட்டரில், குஜராத் பா.ஜ.க. அமைச்சரால் 5 ஆண்டுகளாக ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, 5 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டார்.
ஓம் பிர்லா (மக்களவை சபாநாயகர்) மக்களவைக்கு வந்த பிறகு விரைவில் எதிர்க்கட்சிகளுக்கு மைக்கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம். எனவே மன்னிப்பு கேட்கும்படி நாங்கள் பிரதமர் மோடியிடம் கேட்கலாம். சட்டத்தின் முன் சமத்துவம் சார். என பதிவு செய்து இருந்தார்.