மகாராஷ்டிராவில் புதிய திருப்பம்.. பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு கவர்னர் உத்தரவு?..

 
காடுகள் மற்றும்  வனவிலங்குகள் பிரியர்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர்  உத்தவ் தாக்கரே தரும் ஒரு  மகிழ்ச்சியான செய்தி!

மகாராஷ்டிரா சட்டப்பேரவையை நாளை (30ம் தேதி) கூட்டி முதல்வர் உத்தவ் தாக்கரேவை பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிடுவார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள், மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்று அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆளும் கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

தேவேந்திர பட்னாவிஸ், பகத் சிங் கோஷ்யாரி

இந்த சூழ்நிலையில், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் மகாராஷ்டிரா கவர்னரை சந்தித்து நாளை நம்பிக்கை வாக்கெடுக்கும்படி ஆளும் அரசுக்கு உத்தரவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் என கூறப்படுகிறது. இதனால், மகாராஷ்டிரா சட்டப்பேரவையை நாளை (30ம் தேதி) கூட்டி முதல்வர் உத்தவ் தாக்கரேவை பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிடுவார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சிவ சேனா

அதேசமயம், மகா விகாஸ் அகாடி அரசு தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கு தேவையான எண்ணிக்கை சிவ சேனா தலைவரிடம் (உத்தவ் தாக்கரே) இல்லை என்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யக்கூடும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயம், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா பிரிவு தங்களுக்கு பெரும்பான்மை உள்ளதாக கூறி வருகின்றனர்.