குலுங்கியது மதுரை! மாநாடு போல் நடந்த அமைச்சர் மகன் திருமணம் : 50 மொய் கவுண்டர்கள் - பணம் எண்ணும் மிசின்கள்

 
m

அமைச்சர் மகன் திருமணத்தால் மதுரை மாநகரமே குலுங்கியது.   பொதுவாக வட மாநிலங்களில் தான் அமைச்சர்களும்,  எம்பிக்களும் தங்கள் மகன் , மகள் திருமணத்தை கோடான கோடிகளை கொட்டி  மாநாடு போல் பிரம்மாண்டமாக நடத்தி  வருகிறார்கள்.   அவர்களுக்கு போட்டியாக தமிழகத்தில் திமுக அமைச்சர் மூர்த்தியின் மகன் திருமணம் மதுரையில் அமர்க்களப்படுத்தி இருக்கிறது .    அமைச்சர் வீட்டு திருமணத்தை பார்த்து மதுரையே வாய் பிளந்து நிற்கிறது.

mu

தமிழ்நாடு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.  மூர்த்தி.   மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகளில் முக்கியமான நபர் பி .மூர்த்தி .  மதுரை வெளிச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்.   கடந்த 2006 ஆம் ஆண்டில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.  அதன் பின்னர் 2016 மற்றும் 2021 தேர்தல்களில் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் .  கடந்த ஆண்டு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த போது பி.  மூர்த்திக்கு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.  மதுரை திமுக வடக்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார் பி. மூர்த்தி.

 வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மகன் பி.எம்.தியானேஷ் - எஸ். ஸ்மிர்தவர்ஷினி ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின்.   இன்று நடந்த திருமண விழா தான் மதுரையை குலுங்க வைத்திருக்கிறது. 

m7uu

மதுரை பாண்டி கோயில் அருகே இருக்கும் மைதானத்தில் தான் திருமணம்  மாநாடு போல் நடந்தது.   இந்த திருமணம் ஒரு லட்சம் பேர் அமையும் வகையில் பந்தல்  அமைக்கப்பட்டிருந்தது .  ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேர் சாப்பிடும் வகையில் வகையில் சாப்பாடு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.   அதுவும் சைவம், அசைவத்திற்கு என்று தனித்தனி பந்தல்கள்.   விஐபிகள் சாப்பிடுவதற்கு தனி பந்தல் என்று அசத்தி இருந்தார்கள் . 

மொய் வசூலிப்பதற்கு என்று சுமார் 50 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.   தனியார் நிறுவனம் ஒன்றுதான் இதன்  ஏற்பாடுகளை கவனித்து வந்தன.  மொய் பணம் எண்ணுவதற்காகவே பணம் என்னும் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன.  லேப்டாப்புகளும் வைக்கப்பட்டிருந்தன.  ஹைடெக் ஆக வசூலிக்கப்பட்டது மொய்.  இதுவே மதுரை மக்களை வியப்பில் ஆழ்த்தியது.  

 திருமணத்திற்கு வந்தவர்களுக்கு வியந்து போகும் அளவிற்கு விருந்துகள் அளிக்கப்பட்டன.  சைவ,  அசைவ உணவுகள் என்று தனித்தனியாக பந்தல் அமைக்கப்பட்டு விருந்து படைக்கப்பட்டன.  இந்த விருந்துக்காகவே 2000 ஆடுகள்,  5000 கோடிகள் கொண்டு பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகள் பரிமாறப்பட்டுள்ளன.  இந்த திருமணத்திற்கு உணவு தயாரிக்கும் பணியில்  சுமார் 750 சமையல் கலைஞர்கள் ஈடுபட்டனர்.  திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் சிறப்பு தாம்பூலப் பைகளும் வழங்கப்பட்டன.

mm

இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே திருமண பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளன.  இந்த திருமணத்திற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் மட்டுமல்லாது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினரும் வந்திருந்தனர்.  அது மட்டுமல்லாது திமுக முக்கிய அமைச்சர்கள்,  எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் ,  கூட்டணி கட்சி தலைவர்கள் என்று பலரும் திரண்டு வந்திருந்தனர்.  இதனால் மதுரை மாநகரம் முழுவதும் கார்கள், வேன்கள் மயமாகவே காட்சியளித்தன.  

முதல்வர் மு. க. ஸ்டாலின் தாலி எடுத்துக் கொடுக்க  அமைச்சர் மூர்த்தியின் மகன் தியானேஷ் மணமகளுக்கு தாலி கட்டினார்.  அமைச்சர் மூர்த்தியை வீட்டு திருமணம் மதுரை மக்களை வாய் வழக்க வைத்திருக்கிறது.  அதே நேரம் தமிழக அரசியலில் அமைச்சர் வீட்டின் இந்த  பிரம்மாண்ட திருமணம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.