ஆளும் பா.ஜ.க. அரசு எம்.எல்.ஏ.க்களை வாங்கியது.. ஆனால் பூண்டு வாங்க பணம் இல்லை.. மத்திய பிரதேச காங்கிரஸ் தாக்கு

 
பூண்டை கொட்டும் மத்திய பிரதேச எம்.எல்.ஏ.க்கள்

மத்திய பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு  எம்.எல்.ஏ.க்களை வாங்கியது ஆனால் விவசாயிகள் பயிரிட்டுள்ள பூண்டை வாங்க  பணம் இல்லை என்று மத்திய பிரதேச காங்கிரஸ் தாக்கியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பூண்டு விலை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் பூண்டு சாகுபடி செய்ய அம்மாநில விவசாயிகள் கடும் சோகத்தில் உள்ளனர். கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வெளியான சில வீடியோக்கள் விவசாயிகள் எவ்வளவு வேதனையில் இருக்கின்றனர் என்பதை காட்டின. அந்த வீடியோவில், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு குறைந்த விலை கிடைத்ததைத் தொடர்ந்து பூண்டுகள் நிறைந்த சாக்குகளை நீர்நிலைகளில் வீசும் காட்சி தெளிவாக தெரிகிறது.

பூண்டை ஆற்றில் கொட்டும் விவசாயி

இது தொடர்பாக விவசாயி ஒருவர் கூறுகையில், எங்கள் பூண்டு விளைச்சலுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.1 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது என வேதனையோடு தெரிவித்தார். இந்நிலையில், மத்திய பிரதேச பா.ஜ.க. அரசு விவசாயிகள் மீது அக்கறையற்று செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. மத்திய பிரதேச சட்டப்பேரவையில் 5 நாள் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. 

பா.ஜ.க.

சட்டப்பேரவையின் கேட் எண் 3க்கு முன்னால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சச்சின் யாதவ், ஜிது பட்வாரி மற்றும் பலர் பூண்டை கொட்டி விவசாயிகளுடான ஒற்றுமையை  வெளிப்படுத்தினர்.  மேலும், ஆளும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை வாங்கியது ஆனால் விவசாயிகள் மீது அக்கறையற்றதாக உள்ளது. விவசாயிகள் பியிரிட்டுள்ள பூண்டை வாங்க  பணம் இல்லை  என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.