நெல் கொள்முதல் உள்பட பொய்யான வாக்குறுதிகளை அளித்து சந்திரசேகர் ராவ் விவசாயிகளை சூறையாடினார்.. காங்கிரஸ்

 
கே.சந்திரசேகர் ராவ்

ரூ.1 லட்சம் கடன் தள்ளுபடி, நெல் கொள்முதல் என பொய்யான வாக்குறுதிகளை அளித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் விவசாயிகளை சூறையாடியுள்ளார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியள்ளது.

தெலங்கானா காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மது யாஷ்கி இது தொடர்பாக கூறியதாவது: ராகுல் காந்தியின் தெலங்கானா பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மே 6ம் தேதி ராகுல் காந்தி வாரங்கல் வருகையில், விவசாயி சகர்ஷனா சபாவை நடத்த உள்ளோம். ரூ.1 லட்சம் கடன் தள்ளுபடி, நெல் கொள்முதல் என பொய்யான வாக்குறுதிகளை அளித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் விவசாயிகளை சூறையாடியுள்ளார். 

மது யாஷ்கி

இந்த பருவத்தில்  நெல் விதைக்க வேண்டாம் என விவசாயிகளிடம் சந்திரசேகர் ராவ் கேட்டுக் கொண்டார். இரண்டு மாத போராட்டத்துக்கு பிறகு தற்போது நெல் கொள்முதல் செய்ய முடிவு செய்தார். பா.ஜ.க.வும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதியும் தெலங்கானா விவசாயிகளை சூறையாடுகின்றன. 

ராகுல் காந்தி

ராகுல் காந்தி பங்கேற்கும் கூட்டத்தில், தெலங்கான ராஷ்டிரிய சமிதி-பா.ஜ.க. உறவு  மற்றும் குறிப்பாக தெலங்கானாவில் கல்வகுண்ட்லா குடும்பத்தின் கொள்ளை  ஆகியவை அம்பலப்படுத்தபடும். வேலையில்லா திண்டாட்டம், ஊழல் மற்றும் கல்வி பிரச்சினைகள் குறித்து முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் விவாதிக்காததை கட்சி முன்னிலைப்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.