"திமுக ஆட்சிக்கு இன்னும் 27 அமாவாசை தான்" - க்ளு கொடுக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

 
எம்ஆர் விஜயபாஸ்கர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக இருக்கிறது. திமுக தலைவர்கள் அதிமுக, பாஜகை விமர்சிப்பதும் அவர்கள் இவர்களை திட்டுவதுமாக அனல் பறக்கிறது. அந்த வகையில் கரூர் மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் இன்று காந்தி கிராமம் தொழிற்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

மின்னம்பலம்:விரைவில் மின்சார பேருந்து : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அப்போது பேசிய அவர், "நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்தது. அதன்மூலம் வெற்றியும் கண்டது. திமுக அரசின் சாதனை என்னவென்றால் பொங்கல் பரிசு தொகுப்பில் வெல்லத்திற்குப் பதிலாக கிரீஸை கொடுத்திருக்கிறார்கள். அடுத்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்தல் வர உள்ளது. எனவே இன்னும் 27 அமாவாசை மட்டுமே திமுக ஆட்சி இருக்கும்.

image

அதற்கு பிறகு திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். வெறும் 3 சதவீத வித்தியாசத்தில்தான் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் அதிமுக 200 இடங்களில் வெற்றிபெறும். பொய் சொல்லியே திமுக ஆட்சியைப் பிடித்தது. ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க திமுகவினர் தயாராக இருக்கிறார்கள்; பணத்தை வாங்கிக்கொண்டு அதிமுகவுக்கு வாக்களியுங்கள்’’ என்றார். விஜயபாஸ்கர் சொன்னது போலவே எடப்பாடியும் நாடு முழுவதும் ஒரே தேர்தல் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.