கத்தரிக்காயை கடித்து பார்லியில் பரபரப்பை ஏற்படுத்திய எம்.பி.

 
ப்

 பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது கத்தரிக்காயை பச்சையாக கடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி.

கடந்த ஜூலை 18-ஆம் தேதி பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.   கடந்த இரண்டு வாரங்களாக பாராளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பாராளுமன்றம் கூடியது.   மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  அமலியில் ஈடுபட்டார்கள்.  இதனால் 12 மணி வரையிலும் பின்னர் 2 மணி வரையிலும் இரு அறைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

ப்

 இதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை நடத்தினார்.  அப்போது மக்களவையில் விவாதம் நடைபெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார் .  இதன் பின்னர் மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து வாதம் நடந்தது.   அப்போது சிலிண்டர் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்து விட்டது.

ப்ப்

 600 ரூபாய்க்கு விற்ற சிலிண்டர் இப்போது 1100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.   கடந்த ஒரு வருடத்தில் மட்டும் எட்டு முறை சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.  இப்படியே விலை ஏறிக்கொண்டே போனால் காய்கறிகளை பச்சையாக தான் சாப்பிட வேண்டும்.   காய்கறிகளை பச்சையாக சாப்பிட வேண்டும் என்றுதான் அரசு நினைக்கிறதா எனச் சொல்லிக் கொண்டே,  கத்தரிக்காயை பச்சையாக கடித்துக் காட்டி பரபரப்பு ஏற்படுத்தினார் திரிணாமுல்  காங்கிரஸ் எம்பி ககோலி கோஸ்.