அவுரங்கபாத்தில் கூட்டம் நடத்தும் ராஜ் தாக்கரே... என்ன பிரச்சினை கிளப்புவாரோ என்ற பதைப்பில் மகாராஷ்டிரா அரசு

 
இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் இல்லை! மனிதநேயத்தையும் குத்தகைக்கு எடுக்கவில்லை…. பொங்கிய ராஜ்தாக்கரே

அவுரங்கபாத்தில் மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. ராஜ் தாக்கரே இந்த கூட்டத்தில் பேச உள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

மகாராஷ்டிராவில் மே 3ம் தேதிக்குள் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் ஹனுமான் பாடல்களை ஒலிபெருக்கிகளில் இசைப்போம். இது ஒரு சமூக பிரச்சினை, மதப் பிரச்சினை அல்ல. இந்த விஷயத்தில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள் என அண்மையில் மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே அம்மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், அவுரங்கபாத்தில் மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சி சார்பில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் மே 1ம் தேதியன்று மகாராஷ்டிரா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

மசூதிகளில் ஒலி பெருக்கிகள்

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராஜ் தாக்கரே கடந்த வெள்ளிக்கிழமையன்றே அவரங்கபாத் சென்று விட்டார். ஒலி பெருக்கி விவகாரத்தில், மகாராஷ்டிரா அரசுக்கு விதித்த காலக்கெடு இன்னும் சில தினங்களில் முடிவடைய நிலையில், அவுரங்கபாத்தில் ராஜ் தாக்கரே கூட்டம் நடத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசாங்கத்தை கடுமையாக தாக்கி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தவ் தாக்கரே

அதேசமயம், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசும் இன்று ராஜ் தாக்கரே நடத்தும் கூட்டத்தால் எந்தவித எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளது. கூட்டத்துக்கு 15 ஆயிரம் பேருக்கு அனுமதி, மாலை 4.30 மணிக்கு தொடங்கி இரவு 9.45 மணிக்கு முடித்து விட வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் அவுரங்கபாத் போலீசார் ராஜ் தாக்கரே கூட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.