எம்.எல்.ஏ. கால்களுக்கு மசாஜ் செய்யும் பஞ்சாயத்து பெண் உறுப்பினர் - போட்டோவால் எழுந்த சர்ச்சை

 
m

பஞ்சாயத்து பெண் உறுப்பினர் ஒருவர் எம்எல்ஏவின் கால்களுக்கு மசாஜ் செய்யும் புகைப்படத்தை அவரே சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்ததால் பெரும் சர்ச்சை எழுந்திருக்கிறது.   மேற்கு வங்க அரசியலில் இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

 மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ அசித்தின் கால்களுக்கு பஞ்சாயத்து பெண் உறுப்பினர் ரூமாராய் பால் மசாஜ் செய்து விடும் புகைப்படத்தை ரூமாராய் பால் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார். 

maa

 அந்த புகைப்படத்தின் கீழ் ,  இதற்கு தலைப்புகள் தேவையில்லை. அவர் என் வழிகாட்டி என்று மட்டும் தான் சொல்வேன்.  அவர்  என் கடவுள்.  அவருக்கு சேவை செய்வதற்காக நான் என்றென்றும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படமும் அதில் பதிவாகி இருந்த பதிவும் வைரலாகி மேற்கு வங்க அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.   திரிணாமுல் காங்கிரஸ்  எம்எல்ஏக்களும் தலைவர்களும் கட்சி உறுப்பினர்களை அடிமைகள் போல் நடத்துகிறார்கள் என்று அம்மாநில பாஜகவினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். 

  உடனே எம். எல். ஏ. அசித்,  பாஜகவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.  அண்மையில் தான் பெரிய அறுவை சிகிச்சை  செய்து கொண்டதாகவும் இன்னும் அதில் இருந்து முழுமையாக குணமடையவில்லை என்றும்,  அதனால் தான் உதவி செய்தார் என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

 அவர் மேலும்,  கட்சியினருக்கு தான் தந்தையை போன்றவன் என்றும்,  அவர்கள் தன்னை கவனித்துக் கொண்டால் அது தவறு இல்லை என்றும்,  தன்னை ஒரு மூத்த சகோதரனை பார்த்துக் கொண்டது போல தான் ரூமா தன்னிடம் நடந்து கொண்டார்.  அதில் ஏதும் தவறில்லை என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.