எம்ஜிஆர் பேரன் பரபரப்பு! ’’ஓபிஎஸ்சை இபிஎஸ் நீக்க முடியாது; இபிஎஸ்சை ஓபிஎஸ் நீக்கலாம்’’
ஓபிஎஸ்சை கட்சியில் இருந்து நீக்குவோம் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் உரக்கச்சொல்லி வருகின்றனர். ஆனால், ஓபிஎஸ்சை இபிஎஸ் நீக்க முடியாது; இபிஎஸ்சை வேண்டுமானால் ஓபிஎஸ் நீக்கலாம் என்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் எம்ஜிஆர் பேரன்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தலைவிரித்து அடிக் கொண்டிருக்கும் நிலையில் சென்னை ராமாபுரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வீட்டில் அவரது பேரனும் அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜூனியர் எம் ஜி ஆர் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார்.
அப்போது , எம்ஜிஆர் வேர்வை சிந்தி உழைத்து உருவாக்கிய கட்சி அதிமுக . அதன் பின்னர் ஜெயலலிதாவால் கட்சி காக்கப்பட்டது. ஜெயலலிதா காலத்திலேயே ஓ. பன்னீர் செல்வத்தை நம்பி கட்சி பொறுப்பை கொடுத்தார். ஓ பன்னீர்செல்வம் அதற்கு விசுவாசமாகவும் நடந்து கொண்டார். தற்போது ஒற்றை தலைமை விவகாரம் தலை தூக்கி இருக்கிறது.
எம்ஜிஆரின் பைலாவின்படி தொண்டர்களால் தேர்வு செய்யப் படுபவர்களைத்தான் அதிமுக கட்சி ஏற்றுக் கொள்ளும். சட்டப்படி இருவரும் கையெழுத்து போட்டால் தான் கட்சியில் எந்த முடிவையும் எடுக்க முடியும். அப்படி பார்த்தால் சீனியர் ஓபிஎஸ் தான். அவர்தான் தலைமையை ஏற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி விட்டுக் கொடுக்க வேண்டும். ஆனாலும் இரட்டை தலைமை இருந்தால் கட்சி இன்னும் கட்டி காக்கப்படும் என்றார்.
அவர் மேலும் அது குறித்து, கட்சியும் சின்னமும் ஓ. பன்னீர்செல்வத்திடம் தான் உள்ளது. இரண்டு பேரும் சேர்ந்து தலைமுறையை வைத்தால் கட்சி வேற லெவலுக்கு போகும். மிகப்பெரிய சக்தி வாய்ந்த கட்சியாக அசைக்க முடியாதபடி வளரும். ஒற்றைத் தலைமையை தவிர்த்து விட வேண்டும் . பன்னீர்செல்வம் விட்டுக் கொடுத்ததால் தான் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவரானார். இதை புரிந்துகொள்ள வேண்டும். பன்னீர்செல்வத்தை பழனிச்சாமி கட்சியை விட்டு நீக்க முடியாது. பன்னீர்செல்வம் தான் எடப்பாடி பழனிச்சாமி நீக்க முடியும் என்றார்.
மேலும், பொதுக்குழுவில் பன்னீர் செல்வத்தை அவமானப்படுத்தியது அராஜகமான செயல் என்று கண்டித்தார்.