ஆட்டம் கண்ட எடப்பாடி! எம்.ஜி.ஆர். உயில் எனும் அடுத்த அஸ்திரம்!

 
எ

பைலாவை அடுத்து எடப்பாடிக்கு எதிரான அடுத்த அஸ்திரம்தான் எம்.ஜி.ஆர். உயில்.  இதனால் ஆட்டம் கண்டிருக்கிறது எடப்பாடி தரப்பு.

அதிமுகவின் பைலாவின்படி அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினர்களால்  எந்த விதிகளிலும் திருத்தம் கொண்டு வரலாம்.   ஆனால் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்வு மட்டும் அதிமுகவின் தொண்டர்களால் மட்டுமே தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும்.   இதை எந்த காலத்திலும் மாற்றக்கூடாது மாற்ற முடியாது என்று வகுத்து வைத்திருக்கிறார் எம்ஜிஆர் .

ஏ

அதிமுகவின் இந்த பைலாவை தான் கெட்டியாக பிடித்துக் கொண்டு எடப்பாடிக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார் ஓபிஎஸ்.   இதை உடைத்து எப்படியாவது பொதுச் செயலாளராக ஆகிவிட வேண்டும் என்றுதான் பகிரத முயற்சிகளை எடுத்து வருகிறார் எடப்பாடி.   இந்த முறை எடப்பாடிக்கு எதிராக இன்னொரு அஸ்திரம் எடுக்கப்பட்டிருக்கிறது.   அதிமுகவின் பைலாவை அடித்து எம்.ஜி.ஆரின் உயில்.

  எம்ஜிஆர் எழுதி வைத்திருக்கும் இதில் தேர்தல் நடத்தி அதில் அதிமுக தொண்டர்கள் அனைவரும் வாக்களித்து யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள்தான் பொதுச்செயலாளர் என்று உயில் எழுதி வைத்திருக்கிறார்  எம்ஜிஆர் .   

 இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார்.   அப்போது அவர், ‘’என்றைக்கு ஒரு தொண்டன் இந்த இயக்கத்தை தலைமை ஏற்று வழி நடத்துகிறானோ அன்றைக்குத்தான் எம். ஜி. ராமச்சந்திரனின் ஆத்மா சாந்தி அடையும் என்று சொல்லி இருக்கிறார் எம்ஜிஆர் .  அவர் எழுதி வைத்த உயிலின்படி அவருக்கு பின்னால் இந்த இயக்கத்தை வழிநடத்த தொண்டர்களிடம் தேர்தல் நடத்தி அதிமுக பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் போட்டியிட்டு வெற்றி பெறட்டும் .  அப்படி தேர்தல் நடத்தினால் நானும் போட்டியிடுவேன்.  ஆயிரம் பேரை போட்டியிடவும் வைப்பேன்.  கட்சி விதிகளை திருத்தலாம்.  ஆனால் எம்ஜிஆர் உயிலை  திருத்த முடியாது . அந்த உயில் தற்போது முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமனிடம் இருக்கிறது’’என்கிறார்.

கு

 அவர் மேலும் அது குறித்து,   ’’எம்ஜிஆர் எழுதி வைத்திருக்கும் அந்த உயிலின்படி இன்று வரைக்கும் சத்யா ஸ்டூடியோவின் வருமானம் அதிமுகவிற்கு செல்கிறது. எம்ஜிஆரின் உயிலின்படி தேர்தல் நடத்த ஒப்புக் கொண்டால் நீதிமன்றமே முன் நின்று தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிப்பார்கள்.   ஆனால் எம்ஜிஆரின் விருப்பப்படி செயல்படாமல் குறுக்கு வழியில் பொதுச் செயலாளரின் பதவியை யாரும் கைப்பற்ற நினைத்தால்,  நான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன்’’என்று தெரிவித்துள்ளார்.

 அவர் மேலும்,   ’’எம்ஜிஆர் எழுதி வைத்திருக்கும் உயிலின் படி தான் ஜெயலலிதாவும் போட்டியிட தயாராக இருந்தார்.   அவரை எதிர்த்துப் போட்டியிட யாரும் தயாராக இல்லாததால் அவரே தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவி வகித்தார்.  இல்லை என்றால் ஜெயலலிதாவும் தேர்தலை சந்தித்து இருக்க வேண்டி இருக்கும்’’ என்கிறார்.

பைலாவை அடுத்து உயில் அஸ்திரம் எடுக்கப்பட்டிருப்பதால் ஆட்டம் கண்டிருக்கிறது எடப்பாடி தரப்பு.