எம்.ஜி.ஆர்., ஜெ., அடுத்து எடப்பாடி பழனிசாமிதான்! இதுதான் அதிமுகவின் அத்தியாயம்! இதுதான் அதிமுகவின் எதிர்காலம் -உதயகுமார்

 
e

 அதிமுக பொதுக் குழு செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை அடுத்து எடப்பாடி ஆதரவாளர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.  எடப்பாடியின் தீவிர ஆதரவாளரும்,  முன்னாள் அமைச்சருமான உதயகுமார் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய போது எம்ஜிஆர் ஜெயலலிதாவை கண்ட கனவை நினைவாக்க ஒன்றரை கோடி தொண்டர்களை ஓர் அணியில் இணைத்து அம்மாவின் கனவு நினைவாக மக்கள் பணியாற்றுகின்றவர் எடப்பாடி பழனிச்சாமி.  

ர்

 மக்கள் செல்வாக்கு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி விளங்க வேண்டும் என்று வழங்கி உள்ள மகத்தான தீர்ப்பு.   ஜெயலலிதாவின் ஆன்மாவும் எம்ஜிஆரின் ஆன்மாவும் எடப்பாடி பழனிச்சாமி இடம் இருக்கிறது என்பது இந்த தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.   எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த சத்திய சோதனையில் கிடைத்திருக்கும் வெற்றி மக்களுக்காக உழைக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி என்றார்.

மேலும்,   ஜெயலலிதாவின் ஆன்மாவும் எம்ஜிஆரின் ஆன்மாவும் எடப்பாடி பழனிச்சாமி உடன் என்றைக்கும் இருக்கிறது என்பதை இந்த தீர்ப்பின் மூலம் அறிய முடிகிறது.   ஜெயலலிதாவின் ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி  மலரச் செய்வதற்கான தீர்ப்பாக இந்த  தீர்ப்பு அமைந்துள்ளது.   நியாயத்தின் பக்கம் தொண்டர்களின் பக்கம் சத்தியத்தின் பக்கம் அமைந்துள்ளது இந்த தீர்ப்பு.  

 அறிந்தும் அறியாதது போல தெரிந்தும் தெரியாதது போல இருப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்றைக்கும் .  அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்பட தயாராக பணியாற்றி வருகிறது.   இதுதான் நல்ல நிலை விழிப்பு வெளிப்படையாகவே பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்ட எதிர்காலங்கள் குறித்து ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.   அதிமுக என்பது எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கு அடுத்து எடப்பாடி பழனிச்சாமி.  இதுதான் அத்தியாயம் இதுதான் எதிர்காலம் என்றார்.