கொஞ்சம் கொஞ்சமாக சீமான் இங்க வந்து சேர்ந்து விடுவார்- அர்ஜூன் சம்பத்

 
as

கொஞ்சம் கொஞ்சமாக சீமான் இந்து மக்கள் கட்சிக்கு வந்து சேர்ந்து விடுவார் என்கிறார் அர்ஜுன் சம்பத்.

 இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.   அப்போது,   ஒரு காலத்தில் சீமான் பெரியார் கொள்கையை பேசிக்கொண்டிருந்தார் .  தற்போது கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடன் சேர்ந்து கொண்டிருக்கிறார்.   முதலில் திராவிடம் பேசினார், அடுத்து பெரியாரிசம் பேசினார். அதன் பின்னர் நாம் தமிழர் என தொடங்கினார்.   ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாடு எடுத்தார்.

see

அதன்பின்னர் முருகன்தான் முப்பாட்டன் என்று சொன்னார்.  பின்னர் சிவனை ஏற்றுக்கொண்டார் .  கிருஷ்ணரையும் ஏற்றுக்கொண்டார்.  இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவையும் சீமான் ஏற்றுக்கொள்வார்.  அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இந்து மக்கள்  கட்சியிலும் வந்து கலந்து கொள்வார் என விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,   தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.   வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 2026இல் அதிமுகவோடு பாஜக இணைந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். 

 அவர் மேலும்,   2024 தேர்தலுக்குள் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் சூழல் இருக்கிறது.    ஏனென்றால் முழுக்க முழுக்க பிரிவினைவாதிகளை வன்முறையாளர்களை பிரதமரை கொலை செய்யக் கூடியவர்களை எல்லாம் ஆதரிக்கக் கூடிய ஒரு அமைப்பாக தான் இன்று ஆளும் கட்சியின் கட்டமைப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.