கம்யூனிஸ்ட் போல இயங்கி வந்த கட்சி அமைப்பில் ஒரு தனிநபர்... ஓபிஎஸ் தரப்பு வைத்த வாதம்

 
p

கம்யூனிஸ்ட் கட்சி போல கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வந்த அதிமுக அமைப்பில் இன்றைக்கு ஒரு தனிநபர் முடிவு எடுக்கலாமா? அதை அனைவரையும் ஒப்புக்கொள்ள வைப்பது போன்ற நிலை ஏற்பட்டிருக்கிறது என்று வாதிட்டனர் ஓபிஎஸ் தரப்பினர்.

அதிமுக பொதுக்குழுவை நடத்த தடை விதிக்க வேண்டும்.  அப்படியே நடத்த அனுமதி அளித்தால் ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் பெற்றுள்ள இருபத்தி மூன்று தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும்.  தனித் தீர்மானம் எதையும் நிறைவேற்றக் கூடாது என்கிற ஓபிஎஸ் தரப்பின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி அதையே தீர்ப்பளித்து இருக்கிறார்.  

op

 முன்னதாக தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்ததோடு இருபத்தி மூன்று தீர்மானங்களோடு தனித் தீர்மானம் நிறைவேற்ற தடைவிதிக்க மறுத்திருந்தார்.  இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்து இருந்தது.   இந்த மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி அனுமதிக்கு பின்னர் நீதிபதிகள் துரைசாமி,  சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது அதிகாலை 2. 45 மணிக்கு எடுத்து விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கு நான்கு மணி வரைக்கும் விவாதம் நடைபெற்று 4. 20 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 சென்னை அண்ணா நகரில் இருக்கும் நீதிபதி துரைசாமி இல்லத்தில்தான் இந்த வழக்கின் விசாரணை நடந்தது.   கட்சியின் அடிப்படை உறுப்பினர் குழு ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்கிற அதிமுகவின் சட்ட விதியை மாற்ற முடியாது.   கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கும் ஒருங்கிணைப்பாளரும்,  இணை ஒருங்கிணைப்பாளரும் தான் பொறுப்பு.   ஆகவே,   இருபத்தி மூன்று தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்திற்கும் பன்னீர்செல்வம் ஒப்புதல் தரவில்லை.  இதனால் தனி நபர்களை விட கட்சியின் விதிகளே மேலானது என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

e

 பொதுக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்தால்  விதிகளை திருத்த அடிப்படை கட்டமைப்பு பற்றிய கேள்வி எழாது.  ஏனென்றால் பொதுக்குழு உச்சபட்ச அதிகாரம் படைத்தது.  அதனால் கட்சி தொடர்பாக எந்த முடிவையும் பொதுக்குழு எடுக்கலாம்.   ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு எதையும் சாதிக்க முடியாது என்ற வாதத்தை ஏற்க முடியாது . பொதுக்குழு தான் இறுதியானது என்று எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள் சொல்ல, 

இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு,    தீர்மானக்குழுவால்  தயாரிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதலும் வழங்கியிருக்கிறார் என்று சொல்ல,   இருபத்தி மூன்று தீர்மானங்களை தவிர வேறு எழுதப்படாத தீர்மானங்கள் இருக்கின்றனவா? என்று என்ன தீர்மானம் நிறைவேற்றப் போகிறோம் என்பது உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கேட்க,   எழுதப்படாத தீர்மானங்கள் எதுவும் இல்லை.  ஆனால் அனைவருக்கும் பொதுக்குழுவில் பேச வாய்ப்பு அளிக்கப்படும் .  அப்போது அவர்கள் தங்கள் கருத்தை முன்வைக்கலாம் . அதை தனி தீர்மானமாகக் கொண்டு வரலாம் என்று சொல்ல, உடனே ஓபிஎஸ் வழக்கறிஞர்கள்,  கடந்த 50 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சி போல இயங்கி வந்த அதிமுக அமைப்பில் இன்றைக்கு ஒரு தனிநபர் முடிவு எடுக்கலாமா அதை அனைவரையும் ஒப்புக்கொள்ள வைப்பது போன்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

 இதை தடுத்து கட்சி விதிகளை காப்பாற்றவே நினைக்கிறார் பன்னீர்செல்வம் என்றனர்.   அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுத்த ஒருங்கிணைப்பாளர்களை பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் மாற்றினால் கட்சியை அடிப்படை நீதிக்கு எதிரானது என்று வாதிட்டனர் 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்  வரையறுக்கப்பட்ட இருபத்தி மூன்று தீர்மானங்களை தவிர வேறு எந்த தனித் தீர்மானம் நிறைவேற்றக் கூடாது. பொதுக்குழுவில் எந்த விஷயம் பற்றி விவாதிக்கலாம் . ஆனால் வரைவு செய்யப்பட்ட ஒன்று முதல் இருபத்தி மூன்று தீர்மானங்களை தவிர வேறு எந்த முடிவும் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டனர்