மோடியை போலவே அண்ணாமலையும் அதை தவிர்ப்பது அவருக்கு நல்லது - கே.எஸ்.அழகிரி

 
a

 கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக அரசு சேகரித்து வரும் ஆதாரங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.   இதனால் அண்ணாமலையிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தி இருக்கிறார். 

 இதுகுறித்து செய்தியாளர்கள் அண்ணாமலை இடம் கேள்வி எழுப்ப முயன்ற போது,  எதற்காக குரங்குகள் போல் தாவித்தாவி  வருகிறீர்கள்.. ஊர்ல இருக்கிற நாய் பேய் சாராயம் விக்கிறவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா? என்று ஆத்திரப்பட்டார். 

as

 அண்ணாமலையின் இந்த பேச்சு செய்தியாளர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.  இது குறித்து செய்தியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி,   ஊடகவியலாளர்களை முன்களப்பணியாளர்கள் என்று பெருமைப்படுத்தினார் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் .  ஆனால் பாஜக தலைவர் குரங்குகள் என்கின்றார்.  மேன்மக்கள் என்றும் மேன் மக்களே என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

 அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே. எஸ் .அழகிரி கடுமையாக விமர்சித்துள்ளார்.   மனம் போன போக்கில் வாயில் வருவது எல்லாம் வார்த்தைகளாக அண்ணாமலை பேசுவது அநாகரீகமானது என்று கூறி இருக்கிறார்.

 அவர் மேலும்,  ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பத்திரிகையாளர்களிடம் கண்ணியத்துடனும் சுய கட்டுப்பாடுடனும் நடந்து கொள்ள வேண்டும்.   அப்படி நடந்து கொள்ள முடியவில்லை என்றால் அவரது தலைவர் மோடியை போலவே பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக் கொள்வது அண்ணாமலையின் எதிர்கால அரசியலுக்கு நல்லது என்று அறிவுறுத்தி இருக்கிறார்.