மகாராஷ்டிராவை போல தமிழகத்திலும் மாற்றம் வரும் - புயலை கிளப்பும் பாஜக

மகாராஷ்டிராவில் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்பட்டது போலவே தமிழ்நாட்டிலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே வருவார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசியலில் புயலை கிளப்பி இருந்தார். இதனால் யார் அந்த ஏக்நாத் ஷிண்டே? என்ற சலசலப்பு எழுந்தது. இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கு பின்னர் மகாராஷ்டிராவை போல தமிழகத்திலும் மாற்றம் வரும் என்கிறார் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்.
மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜக சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது . தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசிய போது, ’’சமீபத்தில் தான் சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தியது. அதிலிருந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்கு உள்ளாக தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. இதற்கு தமிழக மின்சார துறை அமைச்சர் மத்திய அரசு சொன்னதால்தான் கட்டணத்தை உயர்த்தியதாக சொல்லி இருக்கிறார் . ஆனால் மத்திய அரசு எந்த காலகட்டத்திலும் எந்த அரசுக்கும் அப்படி சொல்லாது’’ என்று விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன் , ’’தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி திமுக எதையும் செய்யவில்லை. இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மக்களால் வரவேற்கப்பட்ட நல்ல திட்டம் பெண்களுக்கான திருமண உதவி திட்டம். அதையும் நிறுத்திவிட்டார்கள். இப்படி மக்களை ஏமாற்றும் அரசாக தமிழக அரசு இருக்கிறது. 2024 ஆம் ஆண்டுக்கு ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னால் மகாராஷ்டிராவை போல தமிழகத்திலும் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கலாம் என்று ஒரு போடு போட்டார் நைனார் நாகேந்திரன் போட்ட போரில் தமிழக அரசியலில் புயலை கிளப்பி இருக்கிறது.