திமுக மாதிரி ஓபிஎஸ்சும் நமக்கு எதிரி - நடிகை விந்தியா

 
v

திமுக எப்படி நமக்கு எதிரியோ அப்படித்தான் ஓபிஎஸ்சும் நமக்கு எதிரி என்று பேசி அதிமுகவில்  பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகை விந்தியா.

 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஸ்ரீரங்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்சோதி தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளார்.   அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றிருந்த கூட்டத்தில் அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர், நடிகை விந்தியா கலந்துகொண்டு பேசி உள்ளார் ,

e

அப்போது திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.   அதே மாதிரி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.  

 திமுக அரசு மின் கட்டணம் உயர்வு,  விலைவாசி உயர்வு என்று  பல்வேறு சுமைகளை மக்கள் மீது திணித்து இருக்கிறார்கள்.   பொது மக்களை திமுக காப்பதற்கு மறந்து விட்டது.  தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது திமுக என்றார்.

இந்துக்களை தரக்குறைவாக, அவதூறாக   ஆ. ராசா பேசியது குறித்து,  இந்துக்களை இழிவாக ஆ.ராசா பேசிய பேசுவது புதிதல்ல.  இந்துக்களை தரைக்குறைவாக பேசுவதை திமுக வாடிக்கையாக வைத்திருக்கிறது.   இவர்களுக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பாடம் புகட்டுவார்கள் என்றார்.

ஒ

 அதிமுக விவகாரம் குறித்து பேசிய அவர்,   எம்ஜிஆர் -ஜெயலலிதா ஆகியோர் அதிமுகவை கட்டிக்காத்து வந்தனர்.  இப்போது அந்த இடத்தில் எடப்பாடியார் இருந்து நம்மை காத்து வருகின்றார் என்றார் .   தொடர்ந்து பேசிய வித்தியா,  திமுக நமக்கு எப்படி எதிரியோ  அப்படித்தான் அதிமுக அலுவலகத்தை தாக்கியவர்களையும் நாம் நினைக்க வேண்டும்  என்றார்.   நாம் அனைவரும் இணைந்து பணியாற்றி எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழகத்தின் முதல்வராக கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விந்தியாவின் இந்த பேச்சு அதிமுகவினரின் வலைத்தலங்களில்  பரவி வருகிறது.