மன்னிப்பு கடிதம் எழுதிய ராமதாஸ் - கிழித்தெறிந்த ஜெயலலிதா - விளாசும் ஜெ. குரு மகள்

 
ர்

பாமக நிறுவனராக ராமதாஸ்,  தலைவராக ஜி.கே. மணி இருந்து வந்த நிலையில் தற்போது தலைவராக ஜி.கே.மணியிட இருந்த  பொறுப்பை தட்டி தூக்கியிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.    இதுகுறித்து  மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

மகனை கட்சித் தலைவர் ஆக்கியிருக்கிறார்  ராமதாஸ்.  மிஸ்டர் அன்புமணி புதிய தலைவராக ஆனதை நான் எதிர்க்கவில்லை.  ஆனால் மிஸ்டர் அன்புமணி இந்த பாமகவினர்,  வன்னிய சமூகத்திற்கு செய்தது என்ன? என்கிற ஒரே ஒரு கேள்வியை மட்டும் நான் கேட்கிறேன் என்கிறார்.

வி

தொடர்ந்து அதுகுறித்து விருத்தாம்பிகை,   அன்புமணி பாமக தலைவர் ஆகி விட்டதால் அவர் வன்னிய சமூகத்திற்கு என்ன செய்யப் போகிறார்? எதற்காக அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவராக ஆனார் என்பது தெரியும்.   வன்னியர் கல்வி அறக்கட்டளை சொத்து உங்களை விட்டு போக கூடாது என்கிற ஒரே காரணத்திற்காக தான் அன்புமணியை தலைவராக்கி இருக்கிறீர்கள் என்று ராமதாசுக்கும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும்,   2004ஆம் ஆண்டு வரைக்கும் அன்புமணியை யாரென்று கூட பாமகவினருக்கு தெரியாது .  என் தந்தை குரு தான் சுயநலம் பார்க்காமல் அன்புமணியை கட்சிக்கு கொண்டுவந்ததும் இல்லாமல் மத்திய அமைச்சர் ஆக்கினார்.   என் தந்தை சொன்னால்தான் பாமகவினர் கேட்பார்கள் என்பதால் தான் அன்புமணியை வளர்த்துவிட சொல்லி என் தந்தையிடம் கேட்டுக்கொண்டார் ராமதாஸ்.  அதன்படியே என் தந்தையும் அன்புமணியை வளர்த்துவிட்டார்.  அன்புமணியை பெரிய ஆளாக வேண்டும் என்று என் தந்தையிடம் கேட்டுக்கொண்டார் ராமதாஸ் .  அதற்காகவே சுயநலம் பார்க்காமல் அன்புமணியை வளர்த்து விட்டார் என் தந்தை.   அப்படிப்பட்ட அன்புமணி என் தந்தையின் குருவிற்கு செய்தது என்ன? என் தந்தையின் வளர்ச்சி பிடிக்காமல் தானே என் தந்தையை தீர்த்துக்கட்ட நினைத்தார்கள்.

ர்ர்ர்

என் தந்தையின் இறப்புக்கு பின்னால் வன்னியர் கல்வி அறக்கட்டளையை தன் குடும்ப சொத்தாக டாக்டர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என்று மாற்றிக்கொண்டார் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் சுட்டு கொல்லப்பட்ட 25 குடும்பங்களுக்கு ராமதாஸ் ஒன்றுமே செய்யவில்லை.

 2018 ஆம் ஆண்டில் ராமதாஸும் அன்புமணியும் சூழ்ச்சியாலும் வீழ்த்த சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  என் தந்தையை எதிர்த்து இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.  அதனால் பாசத்தால்  சூழ்ச்சி செய்து என் தந்தையின் இறுதிக் காலம் வரை நடித்து முடித்துவிட்டார்கள். 

 மகாபலிபுரத்தில் வன்னியர் முழுநிலவு மாநாட்டில் ஏற்பட்ட பிரச்சினையால் என் தந்தை, ராமதாசும் கைது செய்யப்பட்டார்கள்.  அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ராமதாஸ் தன் மனைவியை விட்டு ஜெயலலிதாவுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விடுதலையானார்.  இந்த மன்னிப்பு கடிதத்தை சட்டமன்றத்தில் ஜெயலலிதா வாசித்துக் காட்டி ராமதாசின் சுயநல அரசியலை கிழித்தெறிந்தார். ஆனால் என் தந்தை,   எத்தனை ஆண்டுகள் சிறையில் வைத்தாலும் எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் சட்டப்படியே வெளியே வருவேன் என்று சூளுரைத்தார்.   

அன்ன்

என் தந்தை இறந்த பிறகு அன்புமணி ராமதாஸ் எங்கள் குடும்பத்திற்கு செய்த துரோகங்கள் அனைத்தும் நான் சொல்லியிருக்கிறேன்.   2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் என் தந்தை இறந்து விட்டதால் அன்புமணிக்கு தனித்துபோட்டியிட திராணியில்லை.  இவர்களுக்கு ஓட்டு கேட்க என் தந்தையும் இல்லை.  என் தந்தைக்கும் எங்கள் இன மக்களுக்கும் ராமதாஸும் அன்புமணியும் செய்த துரோகங்களால்தான் 6 சதவீத வாக்கை 4.5 சதவீதமாக இழந்தார்கள்.  அடுத்து 2021 சட்டமன்ற தேர்தலில் அதே கூட்டணியில் போட்டியிட்டு வாக்கு சதவீதத்தை 3.8 சதவீதமாகஇழந்தார்கள்.   பின்னர் நகர்ப்புற கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 2 சதவீதத்துக்கும் கீழ் போய்விட்டார்கள். 

 வன்னிய சொந்தங்கள் கட்சி பணியை செய்யவில்லை . அப்படி சரியாக செய்திருந்தால் பாமக ஜெயித்து இருக்கும் என்று  வன்னிய மக்களை குறை சொல்கிறீர்கள். அவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. சுயநலமும் கிடையாது. நீங்கள் மாறி மாறி கூட்டணி வைத்து விட்டு எதற்காக பாட்டாளி சொந்தங்களை குறை சொல்கிறீர்கள்.   அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று  சொல்லும் இவர்,   என் வன்னிய குல சொந்தங்களே ராமதாஸும் அன்புமணியும் யாருக்கான வர்கள் என்று சிந்தித்து செயல்படுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.