ஊழல் வரும் முன் காப்போம் -எச்.ராஜா

 
h

 ஊழலை வருமுன் காப்போம் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை தடுத்து வருகின்றார் என தனது பேச்சில் குறிப்பிட்டார் எச். ராஜா.  

 பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் நடந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.   பின்னர் அவர் செய்தியாளர்களிடம் சந்தித்துப் பேசினார் .

k

அப்போது,   தமிழக அரசில் ஊழல் மட்டுமே நடந்து வருகின்றது.   ஊழல் நடக்கும்போதே எங்கள் மாநிலத் தலைவர் உடனடியாக பிடித்து விடுவதால் தமிழக அரசு உடனடியாக பின்வாங்கி முடிவை மாற்றி வருகின்றது.   மாநிலத் தலைவர் அண்ணாமலை ஊழலை வருமுன் காப்போம் என்று தடுத்து வருகின்றார் என்று சொன்னார் எச். ராஜா.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா,   தமிழகத்தில் இதுவரைக்கும் 7 லாக்கப் மரணங்கள் நடந்திருக்கின்றன.  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை .காவல்துறை என்கிற ஒரு துறை தமிழகத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை என்றார்.

  திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைப்பதை பாஜக ஏற்கவில்லை.  இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம் என்றார் .   இந்த கோவில் விவகாரத்தில் மிகவும் மோசமாக நடந்து கொண்டு வருகிறது திமுக.  கோவில் நகைகள் உருக்குவது என்பது கோவில் நகைகளை திருடுவதற்கு சமம்.  திமுகவிற்கு சித்தாந்த ரீதியாக கடுமையான எதிர்ப்பு காட்டிவரும் கட்சி பாஜகதான் என்றார்.