எடப்பாடி போனா போகட்டும்..ஒரு வாரத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஓபிஎஸ்சை நோக்கி வந்துவிடுவார்கள் - வைத்திலிங்கம்

 
oo

ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார்.  ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அந்த அழைப்பை நிராகரித்துவிட்டார்.  எடப்பாடிக்கு பழனிச்சாமி மட்டுமல்லாது சசிகலா ,தினகரன் அனைவரும் ஒன்றிணைந்து அதிமுகவை வழிநடத்துவோம் என்று சொல்லி இருந்தார் ஓபிஎஸ்.  இதற்கு எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் ஒப்புக்கொள்ளவில்லை.

 இந்த நிலையில் தஞ்சாவூரில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட அதிமுக மாவட்ட அலுவலகத்திற்கு ஓபிஎஸ் ஆதரவாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் சென்றிருந்தார்.   அங்கு அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

vi

 அப்போது,   அதிமுகவின் கட்சி விவகாரம் குறித்து அவர் பேசினார்.   ’’எம்ஜிஆர் -ஜெயலலிதா என்கிற இரு பெரும் தலைவர்கள் கட்டிக் காத்த இந்த அதிமுக இயக்கத்தை சுயநலத்திற்காக ஒருவர் மட்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை ஏற்க முடியாது.  ஒற்றைத் தலைமையை ஏற்றுக் கொள்ள முடியாது ’’என்றார்.

அவர் மேலும் அதுகுறித்து,  ‘’எடப்பாடி பழனிச்சாமி செய்த சூழ்ச்சிகள், வஞ்சகத்தை வெளிப்படுத்தாமல் அதிமுகவை வலுவான இயக்கமாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார்.   ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதை நிராகரித்து விடுத்த அறிக்கைகளும், அறிவிப்புகளும் தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை’’என்றவர், 

’’ எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு வாரத்தில் எங்களை நோக்கி வந்து விடுவார்கள்.  கூட்டு தலைமையாக இருந்தால்தான் இயக்கம் வலுவாக இருக்க முடியும் என்பதால் தான் ,   கட்சிக்காக உழைத்தவர்கள் அனைவரும் ஒன்றாக வலுவான ஏக்கமாக இருக்க வேண்டும் எண்ணத்தில் தான்  சசிகலா ,டிடிவி தினகரனுக்கும் ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார்.   மேல்முறையீட்டுக்கு சென்று இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.  அதை நாங்கள் சந்திப்போம்.  ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வராமல் போனால் போகட்டும் தொண்டர்கள் ஓபிஎஸ்சை தேடி வருகிறார்கள்’’என்றார்.