காங்கிரசுக்கு சொல்லி புரிய வைப்போம்- திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன்

 
ட்க்

உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு எதிராக திமுக மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது.   திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இதுகுறித்து , பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் முன்னேறிய வைப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் 103 வது அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கும் நிலையில்,  இந்த தீர்ப்பு சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு என்று திமுக தலைவர் மு .க .ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.  இந்த இட ஒதுக்கீட்டு வழக்கினை விசாரித்த அமர்வில் இருந்த உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி யு.யு. லலித் செல்லும் என்று அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் , நீதிபதி ரவீந்திர பட் அதிர்ச்சி தீர்ப்போடு ஒத்திசைவதாக தெரிவித்து இருக்கும் நிலையில் , வழக்கமான நடைமுறைப்படி ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. இதை எதிர்த்து திமுக  மேல்முறையீடு செய்ய இருக்கிறது .

ட்

ஆனால், திமுக  கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.

 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசிப்பதற்காக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் வரும் 12ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது.  திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுன் தீர்ப்பை வரவேற்று உள்ளதால் அக்கட்சிகள் இந்த அனைத்து கட்சி  கூட்டத்தில் பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

க்ச்

இந்த நிலையில்,  கூட்டணி கட்களின் இந்த முரண்பாடு குறித்து திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் டி. கே. எஸ் இளங்கோவன்,   ’’ எங்களின் நிலைப்பாட்டை காங்கிரசுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் விளக்கி சொல்லி புரிய வைப்போம்’’ என்று கூறி இருக்கிறார்.

அவர் மேலும்,  ‘’வரலாற்று ரீதியாக கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கும்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்கினால் சமூக ரீதியாக கல்வி ரீதியாக பின்தங்கியவர்களின் இட ஒதுக்கீடு குறைந்துவிடும்.  ஆகவே தான் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்.  பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி தொகை உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது’’ என்கிறார்