எந்த முதல்வர் வந்து காப்பாற்றுவார் பார்க்கலாம் - அண்ணாமலை சவால்

 
aa

செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி.  அவரை எந்த முதல்வர் வந்து காப்பாற்றுவார் என்று பார்க்கலாம்.  ஐந்து கட்சிகளுக்கு சென்ற செந்தில் பாலாஜி சிறைக்கு சென்ற பின்னர் ஆறாவது கட்சிக்கு மாறுவார் என்று கடுமையாக எச்சரித்து இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

 மின் கட்டண உயர்வை கண்டித்து கரூர் மாவட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில்  பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசியபோது,  கரூரைச் சார்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி அனைத்து மக்களின் மடியில் கை வைப்பதற்காகவே மின் கட்டண உயர்வினை ஏற்படுத்தியிருக்கிறார். 

dfx

 எதற்காக மின் கட்டணத்தை  உயர்த்துகிறீர்கள் என்று கேட்டால் மோடி சொன்னார் நாங்கள் செய்தோம் என்று சொல்கிறார்.   மின் கட்டணத்தை உயர்த்தக் கோரி மத்திய அரசு எழுதிய கடிதத்தை செந்தில் பாலாஜி வெளியிட வேண்டும்.   தமிழக மின்சார வாரியத்தின் கடனை குறைக்கவே மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கும் .  மற்றபடி மின்கட்டணத்தை உயர்த்த சொல்லவில்லை என்று சொன்னார்.

 அவர் மேலும்,   கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடந்த அரசு விழாவில் செந்தில் பாலாஜியை போல யாரும் இல்லை என்று புகழ்ந்து தள்ளினார் முதல்வர் . அதற்கு காரணம்,   கோபாலபுரத்திற்கு வரும் டாஸ்மாக் வருமானம்,  மின் துறை மூலம் தனியார் நிறுவனம் மூலம் வரும் கோடிக்கணக்கான வருமானம்,  டாஸ்மாக் மூலம் ஆண்டு வருமானம் பல கோடிகள் வருகிறது. அதனால்தான் புகழ்ந்து தள்ளினார் என்று சொன்ன அண்ணாமலை ,   

tt

 செந்தில் பாலாஜி இப்போதே சிறைக்கு செல்வதற்கு தயாராகிக் கொள்ள வேண்டும்.   செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வது நிச்சயம் உறுதி. அப்போது எந்த முதல்வர் வந்து காப்பாற்றுவார் என்று பார்க்கலாம் என்று சவால் விட்டவர்,   செந்தில் பாலாஜி ஏற்கனவே 5 கட்சிகளுக்கு சென்றவர்,  சிறைக்கு சென்று வந்த பின்னர் ஆறாவது கட்சிக்கு மாறுவார் என்று அழுத்தமாகச் சொன்னார் அண்ணாமலை.

 டாஸ்மாக் கடை வைத்து தமிழக பெண்களின் தாலி அறுத்து வருகின்றனர் ஊழல் அரசியல்வாதிகள் என்று திமுக அரசை கடுமையாக சாடினார்.