எலக்சன் நேரத்துல போஸ் கொடுத்துட்டு இப்ப இப்படி செய்யுறாங்களே... குஷ்பு கண்டனம்

 
க்

 தருமபுரம் ஆதீனத்தில் நடக்க இருக்கும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீனம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்வதற்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்திருக்கிறார்.

அ

 பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பழக்கத்திற்கு திராவிடர் கழகம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்ததை அடுத்து, இம்மாதம் இறுதியில் நடைபெறும்  பட்டின பிரவேசத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

 இந்த தடைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ’’தர்மபுரம் பட்டினப் பிரவேசத்தை உயிரை கொடுத்தாவது நடத்துவோம்’’ என்று மதுரை ஆதினம்  தெரிவித்திருக்கிறார்.  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும்,  ‘’தருமபுரம் பட்டினப் பிரவேசத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்’’ என்று சட்டசபையில் பேசியிருக்கிறார்.   

க்ன்

தமிழக அரசு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்தால் பாஜக அதை நடத்த தயாராக இருக்கிறது . ஆதினத்தை தோளில் சுமக்க நானே நேரில் செல்வேன் என்று அரசுக்கு சவால் விடுத்து இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

க்

இந்த விவகாரம் குறித்து பாஜக பிரமுகர் குஷ்பு,  ‘’எலக்‌சன் நேரத்துல மட்டும் திமுக இந்துக்களை சந்தோசப்படுத்த அனைத்து வேலைகளையும் செய்கிறது. கோவில்களில், பூஜைகளில்  திமுக குடும்ப உறுப்பினர்கள் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும் படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புகிறார்கள். வெற்றி பெற்றவுடன் இந்துக்களின் பாரம்பரியத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள்’’ என்று குற்றம் சாட்டியிருக்கும் அவர்,   ’’பட்டின பிரவேசத்தில் தமிழக அரசு தலையிடுவது இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரானது’’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.