‘’தெளிவா சொல்லு.. உபி உருட்டை உருட்டாத.. வாய் சவடாலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..’’
ஒவ்வொரு ஆண்டும் பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது தான் வழக்கம். இந்த உரையில் மாநில அரசின் கொள்கைகள், திட்டங்களை ஆளுநர் வாசிப்பது மரபு. ஆனால் நடப்பாண்டுக் காண முதல் கூட்டத்தொடரில் மாநில அரசு தயாரித்த உரையின் பல பகுதிகளை ஆளுநர் படிக்காமல் புறக்கணித்து உள்ளார். சில பகுதிகளை படிக்காமல் புறக்கணித்ததோடு அல்லாமல் சில வார்த்தைகளை சேர்த்து படித்துள்ளார்.
இதனால் சர்ச்சை எழுந்தது. இதற்கு எதிராக முதல்வர் உடனே தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்து ஆளுநர் வழிநடப்பு செய்தார். சட்டமன்ற நடவடிக்கைகள் முறையாக முடிவடைந்து தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறி விட்டார். இது சட்டமன்றத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கும் செயல் என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மட்டும் இந்த நிலை அல்ல. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருக்கின்றன என்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.
இந்த நிலையில், ஆளுநர், மாநில அரசின் ஊதுகுழலாகத்தான் செயல்பட வேண்டும். அவர் நியமன அலுவலர் மட்டுமே. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என கவியரசர் உவமித்த மிக உயர்வான உணர்வை ஒட்டித்தான், ஆளுநர் பேச வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் முரசொலியில் வந்த கட்டுரையில் இருந்த வரிகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி.
இதற்கு அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ‘’ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலா, கண்டன தீர்மானம் போடச் சொல்லுய்யா உங்க பொம்மை முதல்வரை. வாய் சவடாலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல’’ என்கிறார்.
சவுக்கு சங்கரின் இந்த பதிலடிக்கு, ‘’இந்தியாவில் எந்த மாநில அரசுக்கும் வராத சுயமரியாதை உணர்வு கொண்டு ஆளுநர் உரையை நீக்க அவையில் தீர்மானம் கொண்ட வந்த சுயமரியாதை முதலமைச்சர் எங்கள் தலைவர்! உங்கள் வேலை விமர்சனம் என்கிற பெயரில் திமுகவை களங்கப்படுத்துவது தான். அதான உங்கள் அஜெண்டா. அதனை ஒரு ஓரமா போய் செய்ங்க’’என்கிறார்.
ராஜிவ்காந்தியின் இந்த பதிவுக்கு, ‘’தம்பி. ஆளுநருக்கு பேரவையில நன்றி தெரிவிக்கப் போறீங்களா இல்லையா. தெளிவா சொல்லு. உபி உருட்டை உருட்டாத.’’என்று விளாசுகிறார் சங்கர்.