ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்க சட்ட ஆலோசனை

 
ed

 கடைசி நேரத்தில் நீதிமன்றத்தில் போராடி ஒற்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் ஓபிஎஸ்  செய்துவிட்டதால் கடுப்பான எடப்பாடி, மீண்டும் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ம் தேதி நடக்கிறது என்று அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் -ஐ விட்டு அறிவிக்க வைத்துவிட்டார்.  

அந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லி வருகின்றனர்.  ஆனால் ஒருங்கிணைப்பாளரின் அனுமதி இல்லாமல் ஒருங்கிணைப்பாளர் அறிவிக்காமல் அந்த பொதுக்குழு நடக்காது என்று ஓபிஎஸ் தரப்பினர் சொல்லி வர,  ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி  ஆகிவிட்டதாக எடப்பாடி தரப்பு சொல்லி வருகிறது.

o

 பொதுக்குழு வரும் 11ம் தேதி கூடாது என்று ஓபிஎஸ் தரப்பு உறுதியாக சொல்லி வரும் நிலையில்,  எடப்பாடி தரப்பு பொதுக்குழுவை நடத்தியே தீர வேண்டும். அதில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது. 

 ஒருவேளை பொதுக்குழுவை நடத்தவிடாமல் ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்திற்குச் சென்றால் அதை முறியடிக்க என்ன செய்யலாம் என்று எடப்பாடி தரப்பு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.   பொதுக்குழுவை முறியடிக்க ஓபிஎஸ் தரப்பும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

 இதற்கிடையில் திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தி எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆகிவிட்டால் அடுத்து ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்களின் பதவியை பறித்து அவர்களை கட்சியை விட்டு நீக்கவும் சட்ட நிபுணர்களுடன் கூடுதல் ஆலோசனை நடத்தி வருகிறது எடப்பாடி  தரப்பு என்று தகவல்.