காங்கிரஸில் இருந்து விலகுகிறார் -பாஜகவில் இணையும் நக்மா

 
mg

தமிழ், இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக இருந்தவர் நக்மா.   1900 முதல் 2000ம் ஆண்டு வரை பிசியான நடிகையாக இருந்து வந்தார்.  அதன் பின்னர் படவாய்ப்புகள் குறைந்தது.  இதையடுத்து 2003 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் . 

காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவருக்கு அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. , மேலும் ஜம்மு காஷ்மீர், லடாக் ,புதுச்சேரி மாநில பொறுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன.   ஆனாலும் நக்மா  தொடர்ந்து தலைமை மீது அதிப்தியில் இருக்கிறார்.  அதற்கு காரணம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை விடவும்,  மேலான பதவி வழங்கப்படும்  என்று அவர் கட்சியில் இணையும் போது சோனியா காந்தி உறுதியளித்திருக்கிறார்.

ng

 அதனால் தான் அண்மையில் நடிகை நக்மா தனது டுவிட்டரில்,   2003 ஆம் ஆண்டு எனக்கு தனிப்பட்ட முறையில் அளித்த வாக்குறுதி என்ன ஆச்சு? என்று  சோனியாவுக்கு கேள்வி எழுப்பி இருந்தார்.   மாநிலங்களவை வேட்பாளர் தேர்தலில் போட்டியிட நினைத்திருந்தார்.  இவருக்கு வாய்ப்பு வழங்காத நிலையில் அவர் மாநிலங்களவை தேர்தலில் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்து இருந்தார் .

இந்த நிலையில் தொடர்ந்து காங்கிரஸின் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதால் அவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்.  2003 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற தேர்தல், சட்ட மன்ற தேர்தல் ஆகியவற்றின் பல மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காங்கிரசுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.  

இந்த நிலையில்  நடிகை நக்மா காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் . கட்சிகளின் போது தலைமை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தியில் இருந்த அவர்  தற்போது மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்பதால் மேலும் அதிருப்தியில் இருந்த அவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்.