‘தலைவர்கள் பூங்கா’- பாஜகவின் அடேங்கப்பா ஐடியா

 
அன்

பேராசிரியர் அன்பழகன் சிலையை பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் நிறுவ பாஜக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.  மேலும்,  பொது இடத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளை எல்லாவற்றையும்  அகற்றிவிட்டு தலைவர்கள் பூங்கா ஒன்றை உருவாக்கி அங்கே மொத்தமாக வைத்துவிடுங்கள் என்கிற அடேங்கப்பா ஐடியாவையும் அரசுக்கு கொடுத்திருக்கிறது.

ட்ப்

தமிழக பள்ளி கல்வி துறை அலுவலகங்கள் இயங்கும் கல்லூரி சாலையில், டிபிஐ வளாகத்தில் முன்னாள் கல்வி அமைச்சரும், திமுகவின் தலைவர்களில் ஒருவருமான அன்பழகன் அவர்களுக்கு சிலை நிறுவும் பணிகள் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்று சொல்லும் தமிழக பாஜகவின் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,

"2013 உச்சநீதி மன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் பொது இடங்களில் எந்த சிலை நிறுவவும் தமிழக அரசு  அனுமதியளிக்கவில்லை" என்று கடந்த 23/01.2022 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றில் தலைமை செயலாளர் இறையன்பு  தமிழக அரசின் சார்பில் வாக்குமூலத்தை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

"சாலைகளிலோ, நடைபாதைகளிலோ, பொது மக்களின்  பயன்பாட்டில் உள்ள பொது இடங்களிலோ இனி சிலைகள் வைப்பதற்கு மாநிலங்கள் அனுமதியளிக்கக்கூடாது என்று உச்சநீதி மன்றம் ஜனவரி 18, 2013 அன்று அளித்த  தீர்ப்பின் படி, அரசு அலுவலகங்கள் பொது மக்களின் பயன்பாட்டில் உள்ள இடங்கள் என்பதை உணர்ந்து, நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கல்வி துறை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகன்  சிலையை நிறுவும் முயற்சியினை தமிழக அரசு கைவிட வேண்டும். என்கிறார். 

ன

மேலும், அக்டோபர் 7,2021 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் எம்.சுப்பிரமணியன்  வழங்கிய தீர்ப்பில், பொது இடங்கள், சாலைகள் மற்றும் அரசு நிலங்களில் இனி சிலைகள் அமைக்க அனுமதியளிக்கக்கூடாது என்று உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டதை அரசு மறந்து விடக்கூடாது. இனி அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் சிலைகள் வைப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். 

மேலும், அதே தீரப்பில், பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு 'தலைவர்களின் பூங்கா' ஒன்றை உருவாக்கி அங்கே தலைவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும் என்ற உத்தரவையும் செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.