திமுக நினைப்பது ஒருநாளும் நடக்காது - அழுத்தமாக சொல்லும் எல்.முருகன்

 
mu

திமுக நினைப்பது ஒரு நாளும் நடக்காது என்று அழுத்தமாக சொல்கிறார் மத்திய இணை அமைச்சர் எல். முருகன்.   ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் இடம் திமுகவினர் கோரி வரும் நிலையில் எல்.  முருகன் இவ்வாறு கூறுகிறார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இன்று புதுச்சேரி சென்று இருக்கிறார்.  அங்கே கட்சி அலுவலகத்தில் பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்.  

rn

 அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,  தமிழக ஆளுநர் ரவியை திரும்பப் பெறக் கோரி திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் கையெழுத்து வேட்டை நடத்தி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப ,   புதுச்சேரியை பொருத்தவரைக்கும் முதல்வரும் கவர்னரும் இணைந்து மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்ற நோக்கில் பணி செய்து வருகின்றார்கள் .  ஆனால் தமிழகத்தை பொறுத்தவரைக்கும் திமுகவினர் நீட்டுகின்ற கோப்புகளில் கவர்னர் கையெழுத்து போட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  

 கவர்னர் திமுகவினரிடம் கேள்விகளை கேட்கிறார் .  இதனால் தான் அவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.  திமுகவின் கைப்பாவையாக கவர்னர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  அவர்கள் நினைப்பது ஒரு நாளும் நடக்காது என்று தெரிவித்திருக்கிறார்.