ஜெ., விற்கே துரோகம் செய்திருப்பார்; துரோகத்தின் முழு உருவமே ஈபிஎஸ் தான்- கோவை செல்வராஜ்

 
covai selvaraj

கட்சிக்காக ஓபிஎஸ் உழைத்திருக்கா விட்டால் ஒரு நாள் கூட இபிஎஸ் முதலமைச்சராக இருந்திருக்க முடியாது என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் சண்முகம் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது.. இனிமே தான் ஓபிஎஸ்  ஆட்டமே இருக்கு.. கோவை செல்வராஜ்.!

அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே ஒற்றை தலைமை மற்றும் இரட்டை தலைமையில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் குறித்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்ற கிளையில் ஓ. பன்னீர்செல்வம் இபிஎஸ் நடத்திய பொதுக்குழுவிற்கு தடை கோரி தொடுத்த வழக்கில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் நேற்று காலை முதல் பெரிய குளத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் சந்தித்து வருகின்றன. 

இந்நிலையில் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் பெரியகுளத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில்  சந்தித்து ஆதரவு தெரிவித்த போது தொண்டர்கள் அனைவரும் உங்கள் பக்கம்தான் உள்ளனர் என்று வந்திருந்த நிர்வாகிகள் தெரிவித்தனர். 

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், “கட்சிக்காக ஓபிஎஸ் உழைக்காவிட்டால் நான்கரை ஆண்டுகள் இபிஎஸ் முதல்வராக இருந்திருக்க முடியாது. சசிகலாவால் முதல்வரான இபிஎஸ், சசிகலாவை கட்சியை விட்டு நீக்கியது துரோகமா? அதிமுக ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்காக  முதலமைச்சர் பதவியை சசிகலாவுக்கு விட்டுக் கொடுத்தது துரோகமா? இபிஎஸ் கட்சியை கைப்பற்றி கம்பெனி நடத்த முயற்சிக்கிறார். ஒரு வாரத்திற்குள் ஈபிஎஸ் பக்கம் இருக்கும் நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் சேர்ந்து ஓபிஎஸ் தலைமையில் கட்சி வழி நடத்திச் செல்லப்படும். கட்சியையும் தொண்டர்களையும் காப்பாற்ற ஓபிஎஸ் என்ற புலி பாயும் ஓ.பன்னீர்செல்வம். ஓபிஎஸ் உழைக்காவிட்டால் ஒரு நாள் கூட இபிஎஸ் முதல்வராக இருந்திருக்க முடியாது.


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,  ஓ பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஆக்காமல் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஆக்கி இருந்தால் ஜெயலலிதாவிடம் மீண்டும் முதலமைச்சர் பதவியை இபிஎஸ் கொடுத்திருக்க மாட்டார். அம்மாவிற்கே துரோகம் செய்திருப்பார். துரோகத்தின் முழு உருவமே ஈபிஎஸ் தான்” எனக் கூறினார்.