முனுசாமி வாழவே தகுதி இல்லாதவர்; ரோசம், மானம், சூடு, சொரணை இல்லாதவர்- கோவை செல்வராஜ்

 
கேபி முனுசாமி கோவை செல்வராஜ்

ஓபிஎஸ் இல்லத்தில் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

திமுகவின் கைக்கூலியாக செயல்படுகிறார் கே.பி.முனுசாமி”- கோவை செல்வராஜ்  குற்றச்சாட்டு | Kovai Selvaraj alleges that KP Munusamy is working as DMK's  stooge | Puthiyathalaimurai - Tamil ...

அப்போது பேசிய அவர், “சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி இன்று அதிமுகவிற்கு நான் புதிதாக வந்ததாகவும் , பன்னீர்செல்வம் கூறி நான் பேசுவதாகவும் கூறியுள்ளார். தவறான கருத்தை கூறி, யாரையும் தூண்டி விடுபவர் அல்ல நான். முனுசாமி காசுக்கு அடிமை . 1974 ல் அதிமுகவில் 14 வயதிலேயே வந்தேன். எட்டப்பன் பழனிசாமி , முனுசாமி போல் அல்ல நான். 84ல் ஆர் எம் வீரப்பன் மீதான கோபத்தால்  காங்.சென்றோம் , பின்னர்  ஜெ. தலைமை எற்றவுடன் அதிமுக வந்தோம். நான் யாரையும் போல கொலைகாரன் அல்ல. பராசக்தி புத்தகம் வைத்திருந்தாக ஓ.பன்னீர் செல்வம் கூறியது 1962ல் , அப்போது அதிமுக இல்லை. 

துரைமுருகன் வெற்றிக்கு வீரமணி, முனுசாமி தான் காரணம். அதற்கு ஆதாரம் என்னிடம் இருக்கிறது. கேபி முனுசாமி ஒழுங்காக நடந்துகொள் , உன்னுடைய ஆயோக்கிய தனத்தை வெளிப்படுத்துவேன் , உன்னைப்போல் கோமாளி அல்ல நான். கிருஷ்ணமூர்த்தியிடம் கடந்த தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றினார். திமுக உதவியுடன் பெட்ரோல் பங்க் வாங்கவில்லை என முனுசாமியால் கூற முடியுமா..? முனுசாமி பொதுவாழ்க்கை வாழ தகுதி இல்லாதவர். அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கி , ராஜ்ய சபா வாய்ப்பு வழங்கியது ஒபிஎஸ். சட்டமன்ற தேர்தலில்தான் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு வழங்கினார். ரோசம் , மானம் , சூடு , சொரணை இருந்தால் முனுசாமி இப்படி எல்லாம் பேச மாட்டார்” எனக் கூறினார்.