கட்சி தேர்தல் நடைபெற்றால் ஓபிஎஸ் ஒரு கோடி வாக்குகளை பெறுவார்- கோவை செல்வராஜ்

 
covai selvaraj

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். 

kovai selvaraj, ஒரு மாத காலத்தில் கட்சியை கைப்பற்றும் ஓபிஎஸ்: கோவை  செல்வராஜ் பேச்சு - we will lead aiadmk in a month said ops supporter kovai  selvaraj - Samayam Tamil

அப்போது பேசிய அவர், “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகுதி தராதாரம் இல்லாதவர், கோமாளி போல் பேசி வரும் அவருக்கு பன்னீர்செல்வத்தை பற்றி பேச  எந்த உரிமையும் இல்லை தகுதியும் இல்லை. அதிமுக எடப்பாடி உருவாக்கிய கட்சி அல்ல அது எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓ பன்னீர்செல்வத்தை தான் முதல்வராக்கினார் பழனிசாமியை முதல்வராக்கவில்லை. கட்சி தேர்தல் நடைபெற்றால் ஓபிஎஸ் ஒருகோடி வாக்குகளை பெறுவார்.

கொடநாடு வழக்கில் 4 வருடமாக காலம் தாழ்த்தப்பட்டுள்ளது . கொடநாடு வழக்கில் தவறு செய்தவர்களை முதல்வர் ஸ்டாலின் விரைந்து கண்டு பிடித்து தண்டனை வாங்கி தர வேண்டும். மேலும், கடந்த ஆட்சியில் ஊழலில்  ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும்" என எச்சரிக்கை விடுத்தார்.