கொடநாடு வழக்கில் பரபரப்பு - முக்கிய நபரை கைது செய்ய அனுமதி கேட்கும் சிபிசிஐடி

 
ko

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டில் கொலை, கொள்ளை சம்பவம் நிகழ்ந்தன.  இது தொடர்பான வழக்கில் திமுக ஆட்சிக்கு வந்ததும் மறுவிசாரணை நடந்து வந்து வருகிறது.  இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு மறுவிசாரணை நடந்து வந்தது . 

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த கொடநாடு வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.  இதனால் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று தற்போது இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.  சிபிசிஐடி போலீசாரும் வழக்கை வரைந்த முடிப்பதற்காக கூடுதல் போலீசார் கொடுத்திருக்கின்றார் டிஜிபி.

 சேலம், கோவை, தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 10 உதவி ஆய்வாளர்கள் உட்பட 34 போலீசார் சிபிசிஐடி போலீசாரின் கொடநாடு தனிப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு .  இந்த வழக்கை 5 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்த மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான குழு சசிகலா வரைக்கும் விசாரணை நடத்தி இருந்தது.  இதன் பின்னர் தான் இந்த வழக்கு அவசர அவசரமாக சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

kod

 இவ்வழக்கில் முக்கிய விஐபி ஒருவர் சம்பந்தப்பட்ட இருப்பதாக ஐஜி சுதாகர் கண்டறிந்து இருக்கிறார்.   அதற்கான ஆவணங்களும் சிபிசிஐடி வசம் ஒப்படைத்து இருக்கிறார்.  சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகேசன் தலைமையிலான போலீசார் புலனாய்வு செய்து வருகின்றார்கள்.  49 பேர் கொண்ட இந்த தனிப்படையின் விசாரணையில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. 

 ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் ஒரு குறிப்பிட்ட விஐபி குறித்து அறிக்கை கொடுத்திருக்கும் நிலையில் அவருக்கு எதிராக சிபிசிஐடி போலீசாரும் கூடுதல் ஆதாரங்களை திரட்டி இருக்கிறார்கள் என்று தகவல்.  

 எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமான நபரான சேலம் இளங்கோவன் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார். சசிகலா,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி ஆகியோரிடம் நடத்திய விசாரணை அடிப்படையிலும் புதிதாக கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையிலும் மேலும் ஒரு முக்கியமான விஐபியை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் பரவுகிறது.

 கைது செய்வது தொடர்பான நடைமுறைகளை டிஜிபிக்கும் தமிழக உள்துறை செயலாளருக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.   இந்த அடிப்படையில் தான் டிஜிபி சைலேந்திரபாபு கொடநாடு வழக்கை விரைந்து விசாரிப்பதற்கு வசதியாக கூடுதல் போலீசாரை சிபிசிஐடிக்கு கொடுத்திருக்கிறார். அனேகமாக ஜனவரி மாதத்தில் அந்த முக்கிய விஐபி கைது செய்து படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்று சிபிஐ வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.