9 வினாடிகளில் தரைமட்டமான இரட்டை கோபுரம்... சமாஜ்வாடி அரசின் ஊழல், அராஜக்கொள்கைக்கு வாழும் பதிவு.. கேசவ் பிரசாத்

 
நொய்டா இரட்டை குடியிருப்பு கோபுரம் இடிப்பு

உத்தர பிரதேசம் நொய்டாவில் நேற்று இடிக்கப்பட்ட இரட்டை குடியிருப்பு கட்டுமானம் முந்தைய சமாஜ்வாடி அரசின் ஊழல் மற்றும் அராஜக்கொள்கைக்கு வாழும் பதிவு என அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா குற்றம் சாட்டினார்.


உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் சூப்பர்டெக் என்ற நிறுவனம் பிரமாண்ட இரட்டை கோபுர குடியிருப்பை கட்டியது. இந்த கட்டுமான சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாகவும், புவியியல் சார்ந்து கட்டப்படவில்லை என்றும் புகார் எழுந்தது. மேலும் இந்த விவகாரம் உச்ச  நீதிமன்றத்து சென்றது. அந்த கட்டிடத்தை உச்ச நீதிமன்றம் இடிக்க உத்தரவிட்டது. பல காரணங்களால் இடிப்புக்கு விதிக்கப்பட்ட கெடு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்த இரட்டை கோபுர குடியிருப்பு இடிக்கப்பட்டது.  வெறும் 9 வினாடிகளில் இடித்து இரட்டை கோபுர குடியிருப்பு கட்டுமானம் தரைமட்டமானது.

கேசவ் பிரசாத் மவுரியா

நொய்டா இரட்டை குடியிருப்பு கட்டுமான நேற்று இடிக்கப்படுவதற்கு முன், கட்டுமானம் தொடர்பாக நேற்று காலையில் பா.ஜ.க.வும், சமாஜ்வாடி கட்சியும் வார்த்தை போரில் ஈடுபட்டன. உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா டிவிட்டரில்,  நொய்டாவில் உள்ள சூப்பர்டெக் இரட்டை கோபுரம், முன்னாள் சமாஜ்வாடி அரசின் ஊழல் மற்றும் அராஜகக் கொள்கைக்கு வாழும் என பதிவு செய்து இருந்தார். 2004ம் ஆண்டு நொய்டா இரட்டை குடியிருப்பு கோபுரம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமாஜ்வாடி

உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவின் குற்றச்சாட்டுக்கு சமாஜ்வாடி பதிலடி கொடுத்துள்ளது. சமாஜ்வாடி டிவிட்டரில், பா.ஜ.க.வின் பல்வேறு ஆண்டுகளின் வரவு-செலவு புள்ளிவிவரங்களை ஷேர் செய்து, இந்த ஊழல் கட்டிடத்திற்கு உங்களது பா.ஜ.க.தான் பொறுப்ப. ஏனென்றால் சூப்பர்டெக் கூட பா.ஜ.க.வுக்கு நன்கொடை கொடுக்கிறது. தரகர்களும் பா.ஜ.க.வில் அலவலகத்தில் அமர்ந்து கொண்டு பா.ஜ.க.வின் தொண்டர்களுடன் தரகு வேலை செய்கிறார்கள். நீங்கள் சூப்பர்டெக் நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்கவில்லை என்றும், அதன் ஊழலில் பங்குதாரர் இல்லை என்று சத்தியம் செய்கிறீர்களா? என்று பதிவு செய்து இருந்தது.