தேசிய அளவில் தற்போது 2 கட்சிகள் உள்ளன, ஒன்று தீவிரமான ஊழல் கட்சி மற்றொன்று கடும் நேர்மையான கட்சி.. கெஜ்ரிவால்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

நம் நாட்டில் தற்போது தேசிய அளவில் 2 கட்சிகள் உள்ளன, ஒன்று தீவிரமான ஊழல் கட்சி(பா.ஜ.க.), மற்றொன்று கடுமையான நேர்மையான கட்சி (ஆம் ஆத்மி) என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன் அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: நான் ஒரு சாதாரண மனிதன். நான் ஒரு சாதாரண, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். நான் ஐ.ஐ.டி. சென்றேன், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தேன். இன்று நான் எதுவாக இருந்தாலும், அது எனக்கு கிடைத்த வாய்ப்பின் காரணமாக. 

பா.ஜ.க.

எனது இரு குழந்தைகளும் ஐ.ஐ.டி.யில் படித்தவர்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் எனது குழந்தைகள் பெற்ற கல்வியை வழங்க வேண்டும் என்பதே எனது கனவு. நான் பெற்ற பெற்ற உயர்தரக் கல்வி. தேசிய அளவில் தற்போது இரண்டு கட்சிகள் மட்டுமே உள்ளன. ஒன்று கடும் நேர்மையான கட்சி (ஆம் ஆத்மி), மற்றொன்று தீவிரமான ஊழல் கட்சி (பா.ஜ.க.). முழுமையான ஊழல் கட்சியில் படித்தவர்கள் இல்லை. அதேசமயம் நேர்மையான கட்சியில் நல்ல கல்வி மற்றும் உண்மையான ஐ.ஐ.டி. பட்டம் பெற்றவர்கள் உள்ளனர். 

ஆம் ஆத்மி

அவர்கள் (பா.ஜ.க.) எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க ரூ.20-50 கோடி செலவு செய்கிறார்கள். பள்ளிகள், மருத்துவமனைகள் கட்ட நினைத்தால் நான் ஏதாவது தவறு செய்கிறேனா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.  இதனை தொடர்ந்து கெஜ்ரிவால் அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் தொடர்பாக குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவையில் இருந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 58 பேரும் தீர்மானத்துக்கு ஆதரவளித்தனர். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில்  கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது.