வேலை இல்லாதவர்களுக்கு வேலை, வேலை கிடைக்காதவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்.. குஜராத் மக்களுக்கு கெஜ்ரிவால் வாக்குறுதி

 
டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கு  இலவச பயணம்….. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை வழங்கப்படும், வேலை கிடைக்காதவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அம்மாநில மக்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார்.

குஜராத்தில் தற்போது முதல்வர் பூபேந்திர ரஜினிகாந்த் படேல் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு டிசம்பரில் குஜராத் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியை தொடர்ந்து பஞ்சாபில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தற்போது குஜராத்திலும் ஆட்சியை கைப்பற்ற விரும்புகிறது. இதற்காக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்துக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் ஆம் ஆத்மிக்கு ஆதரவான அலையை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்.

ஆம் ஆத்மி

அரவிந்த் கெஜ்ரிவால்  நேற்று ஒரு நாள் பயணமாக குஜராத் சென்றார். சோம்நாத்தில் ஆம் ஆத்மி ஏற்பாடு செய்து இருந்த பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், குஜராத் மக்களுக்கு வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் அளிக்கிறேன். குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் மாநிலத்தில் வேலையில்லாத ஒவ்வொருவருக்கும் வேலை வழங்கப்படும். வேலை கிடைக்காத அனைவருக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் உதவிதொகை வழங்கப்படும்.

பா.ஜ.க.

தற்போது குஜராத் மக்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர்களுக்கு (பா.ஜ.க.) வாக்களித்தால் குஜராத் மக்களுக்கு கள்ள மதுபானம் கிடைக்கும் அல்லது எங்களுக்கு வாக்களித்தால் குஜராத் மக்களுக்கு வேலை கிடைக்கும். மாநிலத்தில் கள்ள மதுபானங்கள் வெளிப்படையாக விற்கப்படுகின்றன என தெரிவித்தார்.