மக்களிடம் முரட்டு தனமாக நடந்து கொள்ள கூடாது.. பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு கெஜ்ரிவால் அட்வைஸ்

 
தேவையில்லாமல் வாய் விட்டு சிங்கப்பூரிடம் வாங்கி கட்டிக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

மக்களிடம் முரட்டு தனமாக நடந்து கொள்ளவோ அல்லது யாருக்கும் எதிராக ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தவோ கூடாது என பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அறிவுறுத்தினார்.

பஞ்சாபில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் மக்கள் நலனுக்காக உழைக்க வேண்டும், அணியாக செயல்படுங்கள். மக்களிடம் முரட்டு தனமாக நடந்து கொள்ளவோ அல்லது யாருக்கும் எதிராக ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தவோ கூடாது. பகவந்த் மான் மற்றும் அவரது பணிகளை பற்றி நாடு முழுவதும் பேசப்படுகிறது.

ஆம் ஆத்மி

அக்டோபரில் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு, வரும் நாட்களில் விவசாயிகளுக்கு காசோலைகள் வழங்கப்படும். குழுவாக செயல்பட வேண்டும். தனிப்பட்ட லட்சியங்களை விட்டுவிட்டு குழுவாக செயல்பட்டால் பஞ்சாப் முன்னேறும். பகவந்த் மான் ஒவ்வொரு அமைச்சருக்கும் இலக்கு நிர்ணயிப்பார். அதனை அவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும். இரவுவும் பகலும் உழைக்க வேண்டும். உங்கள் இலக்கு நிறைவேறவில்லை என்றால்,அமைச்சரை மாற்றுங்கள் என்று பொதுமக்கள் கூறுவார்கள்.

பா.ஜ.க.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மான் தலைமையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வழிகாட்ட நான் உங்களுக்கு மூத்த சகோதரன் போல் இருப்பேன். நான்கு மாநிலங்களில் (உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், மணிப்பூர் மற்றும் கோவா) வெற்றி பெற்ற போதிலும், உள்கட்சி சண்டையால் பா.ஜ.க.வால் இதுவரை ஆட்சி அமைக்க முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.